‘உங்க பொண்டாட்டி புள்ளல அந்த காசுல சாப்புடுதுனு வெக்க படமாட்டாங்களா’ – வெளுத்து வாங்கிய பாண்டிராஜ்.

0
488
ET
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பாண்டிராஜ். இவர் சசிகுமாரின் தயாரிப்பில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த பசங்க என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இவர் 2010 ஆம் ஆண்டு அருள்நிதியை வைத்து வம்சம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு பிறகு இவர் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மூடர்கூடம், கோலிசோடா, இது நம்ம ஆளு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருந்தார். தற்போது இவர் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

எதற்கும் துணிந்தவன் படம்:

மேலும், சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், வழக்கம்போல் படம் வெளியான உடனே விமர்சகர்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறாக தங்களுடைய கருத்துக்களை பதிவிடுவார்கள். அதில் ப்ளூ சட்டை மாறனை பற்றி சொல்லவே வேண்டாம். எல்லோருடைய படத்தையும் கிழித்து எடுப்பதே இவருடைய வேலை.

This image has an empty alt attribute; its file name is 1-259-1024x514.jpg

எதற்கும் துணிந்தவன் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறியது:

அந்த வகையில் எதற்கும் எதற்கும் துணிந்தவன் படம் மட்டும் என்ன விதிவிலக்கா? சமீபத்தில் இவர் எதற்கும் துணிந்தவன் படத்தை விமர்சனம் செய்து இருந்தார். அதில் அவர், வழக்கமான ஹீரோ- வில்லன் கதை தான் சொல்லி இருக்கிறார்கள். ஹீரோ நல்ல குடும்பத்தை சேர்ந்தவன். வில்லன் தீய வேலையை செய்பவன். பின் இருவருக்கும் இடையே பிரச்சினை வருகிறது. அதை என்ன செய்வது என்று தெரியாமல் இயக்குனர் பொள்ளாச்சி பாலியல் பிரச்சனை வைக்கிறார். இந்த பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையை தெளிவாக எடுத்து சொல்லியிருந்தார் மக்களுக்கு பார்ப்பதற்கு ஆர்வம் இருந்து இருக்கும்.

-விளம்பரம்-

விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்:

ஆனால், இவர்கள் அதை விட்டு ஹீரோ ஹீரோயினி காதல் செய்வது, நடனம் ஆடுவது, காமெடி என்று கதையை வேறு ட்ராக்கில் கொண்டு சென்றதால் படம் பாய் போட்டு படுத்து விட்டது என்றே சொல்லலாம். மொத்தத்தில் படம் மக்களுக்கே சலிப்படைய செய்துவிட்டது என்று பயங்கரமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இவர் விமர்சித்து குறித்து இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எல்லோரையுமே கேவலமாக திட்டி அதில் வரும் லைக்ஸ், கமெண்ட் வைத்து பணம் சம்பாதிக்கிறீர்கள்.

பதிலடி கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்:

உங்க பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் அந்த காசில் தான் சாப்பிடுவார்கள் என்று வெட்கப்பட மாட்டாங்களா? இப்படி பேசினால் உங்களுக்கு கோவம் வருமா? வராதா? நீங்கள் சினிமாவை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த சினிமாவை நம்பி தான் பிழைக்கிறார்கள். அப்போது சினிமாவிற்கு மரியாதை கொடுக்க வேண்டுமா? இல்லையா? என்று கூறி இருக்கிறார். இப்படி பாண்டிராஜ் அவர்கள் ப்ளூ சட்டை மாறன் குறித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement