நடிகை சினேகாவால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து இயக்குனர் பாண்டிராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பாண்டிராஜ். இவர் முதலில் உதவி இயக்குனராக சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இவர் சசிகுமாரின் தயாரிப்பில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த பசங்க என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இவர் 2010 ஆம் ஆண்டு அருள்நிதியை வைத்து வம்சம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு பிறகு இவர் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மூடர்கூடம், கோலிசோடா, நம்ம வீட்டு பிள்ளை, இது நம்ம ஆளு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருந்தார். கடைசியாக இவர் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
பாண்டிராஜ் பற்றிய தகவல்:
இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இதை அடுத்து இவர் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாண்டிராஜ் பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினேகா குறித்து பாண்டிராஜ் சொன்னது, சேரன் சாரிடம் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் ஒரு கதையை சொல்லுவார். அதை ஒவ்வொரு அசிஸ்டன்ட் இடமும் கொடுத்து நீ இந்த படம் செய்வதாக இருந்தால் அதை எழுதிக் கொண்டு வா என்று சொல்லுவார். அப்படித்தான் பாண்டவர் பூமி கதையை கொடுத்தபோது சிம்பு தேவன் காமெடி கதையாக மாற்றி கொடுத்தார். அதே போல் தான் அவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் தங்களுக்கு எப்படி வருமோ அதே போல் கதையை கொடுப்பார்கள்.
சினேகா செய்த வேலை:
நான் சேரன் சார் போல கொஞ்சம் எமோஷனலோடு கொடுப்பேன். அவருடைய கதையுடன் என்னுடைய கதையும் ஒத்துப் போகும். ஆட்டோகிராப் கதையும் இப்படித்தான் நடந்தது. இதனால் சினிமா கற்றுக்கொள்வதற்கு கொஞ்சம் எளிதாக இருந்தது. பாண்டவர் பூமி படத்தில் சேரனுடன் பணியாற்றினேன். அதற்கு பிறகு நடிக்கப் போகிறேன் என்று அவர் போயிட்டார். அதன் பின் ஆட்டோகிராப் படத்தில் சேரனுடன் வேலை செய்தேன். அப்போது சினேகாவால் எனக்கும் அவருக்குமே பிரச்சினை வந்தது. பொதுவாக இயக்குனர்கள் தங்களுடைய கோபத்தை உதவி இயக்குனர் இடம் தான் காண்பிப்பார்கள்.
https://www.youtube.com/watch?v=O2JJpuPM6P8
ஷூட்டிங் ஸ்பாட்டில் சேரன்:
உதவி இயக்குனர்கள் தங்களுக்கு கீழ் இருக்கும் டெக்னீஷ்யன்கள், டிரைவர்கள் இடம் தான் காட்டுவார்கள். அப்படித்தான் தன்னுடைய டிரைவரிடம் நான் கடுமையாக நடந்து கொண்டதாக சினேகா சேரனிடம் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டவுடன் ஸ்பாட்டிலேயே என்னை உண்டு இல்லை என்று சேரன் பண்ணிவிட்டார். சேரன் சாருக்கு உதவியாளராக, தம்பியாக அவருடைய கஷ்டகாலத்தில் எல்லாமுமாய் இருந்தேன். இருவருக்கும் இடையிலான நம்பிக்கை ஒரு நடிகையால் உடைந்தது. அப்படியே கண்கலங்கி விட்டேன். அந்த சண்டையில் எதுவுமே பேசாமல் அங்கிருந்து வெளியே கிளம்பி விட்டேன். கையில் ஒரு ரூபாய் கூட இல்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.






