குமரன் – சித்ராவிற்கு முற்றிய மோதல். பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் நிலை. புலம்பும் படக்குழு.

0
189058
pandiyan-stores
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. அதிலும் ‘முல்லை– கதிர்’ கதாபாத்திரத்தில் சித்ரா, குமரன் நடித்து வருகிறார்கள். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலில் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூட சொல்லலாம். எப்போதுமே வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து கொண்டிருக்கும் கலைஞர்களைப் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம். அதில் செந்தில்- ஸ்ரீஜா, ரக்ஷிதா– தினேஷ் தற்போது ஆலியா மானசா –சஞ்சீவ் ஜோடி என பல பேரை சொல்லலாம். ஆனால், இவர்களுக்கு எதிர்மறையாக இருப்பவர்கள் தான் சித்ராவும், குமரனும். இவங்க சீரியல்ல மட்டும் தாங்க நல்லா புரிஞ்சுகிட்ட ஜோடியாக இருப்பாங்க. நிஜ வாழ்க்கையில பாத்தா ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் மோதி கிட்டு, சண்டை போட்டுக் கிட்டு இருப்பாங்க.

-விளம்பரம்-
Image result for pandian stores kathir mullai"

இத சொன்னா சில பேர் நம்ப கூட மாட்டுங்கிறாங்க!! என அந்த அளவிற்கு அவர்களுடைய கதாபாத்திரத்தை ரசிக்கரார்கள். அப்படி என்ன தான் இவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டனும் பார்க்கலாம் வாங்க… இது குறித்து ஒரு நடிகரிடம் கேட்ட போது அவர் சொன்னது, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று டிவி சீரியலில் நடிக்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து இருந்தார்கள். இந்த விருதுக்காக நடிகர், நடிகைகளை தேர்வு செஞ்சாங்க. அப்பதான் சிறந்த சீரியலில் ஜோடிக்கான நாமினேஷன்ல பாண்டியன் ஸ்டோரிலிருந்து சித்ரா குமரன் ஜோடியை தேர்வு செஞ்சாங்க. மேலும்,மக்களிடம் இருந்தும் இந்த ஜோடிகளுக்கு என அதிக ஓட்டும் கிடைச்சது. விருது கமிட்டியில் இருந்து குமரன் கிட்ட இந்த அவார்டு குறித்து பேசினார்கள். அப்போ, குமரன் வந்து எனக்கு விருது தனியா கொடுத்தால் நான் வாங்கிக்கிறேன். ஆனா ஜோடின்னா எனக்கு அந்த விருதே வேண்டாம்ன்னு சொல்லிட்டு போயிட்டாரு.

இதையும் பாருங்க : 14 வயதில் நடிக்க வந்த ராதா மகளா இது. என்ன இப்போ இப்படி இருக்காங்க.

- Advertisement -

இதைக் கேட்டவுடன் எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும்,விருது கமிட்டியும் சீரியல் ஜோடிக்கு தாங்க விருது தரணும். அப்படி தனியா எல்லாம் கொடுக்க முடியாது. அதுமட்டும் இல்லாம மக்கள் ஓட்டு உங்க இரண்டு பேருக்கும் தான்னு சொன்னாங்க. ஆனாலும்,குமரன் ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று நினைத்தபடி இறங்கி வரவே இல்ல. கடைசியில வேற ஒரு ஜோடிக்கு தான் விருது போயிடுச்சு. தற்போது சின்னத்திரையில் ட்ரெண்டிங் நியூஸ் இது தாங்க. இதுகுறித்து அந்த யூனிட் வட்டாரத்தில் கேட்டதற்கு சில பேர் கூறியது,ஆரம்பத்தில்ல சித்ராவும், குமரனும் நல்ல நண்பர்களாக தான் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேருக்கு உள்ளேயும் என்ன நடக்குதுன்னு தெரியல. மேலும், ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக் கொள்வது கொஞ்சம் குறைச்சி கிட்ட மாதிரி எங்களுக்கு தோணுச்சு. நாங்க அவங்களோட பிரண்டாக இருந்தாலும் அவங்களுடைய பர்சனல் விஷயத்தில் தலையிட முடியாது.

Image result for pandian stores kathir mullai"

நாங்க யாருமே அவங்க கிட்ட ஏன் பேசல? ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டு? இருக்கீங்கன்னு கேட்கல. அதுமட்டுமில்லாம பாண்டியன் ஸ்டோர் சீரியல்ல கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். அந்த நிகழ்ச்சியில் ‘வெண்ணிலவே, வெண்ணிலவே’ பாட்டுக்கு இவர்கள் ஆடிய நடனம் அட்ராசிட்டி ஆக இருந்தது சொல்லலாம். அந்த அளவிற்குப் பேரும் சூப்பராக பட்டைய கிளப்புனாங்க. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை.

-விளம்பரம்-
Image result for pandian stores kathir mullai"

மேலும், பண்டிகை நாட்களில் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கூட ஜோடியாக கலந்து கொள்ள வில்லை. குமரனும் எப்போதும் நான் வரலன்னு சொல்லு மறுத்துவிடுவார். அது மட்டுமில்லாம ஒரு சில பேர் இவங்க ரெண்டு பேர்ல இருந்து யாரோ? ஒருவர் சீரியல்ல விட்டு விலகிப் போகிறார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. அப்படி அவங்க ரெண்டு பேருல இருந்து ஒருத்தர் சீரியல் விட்டு போனா! அந்த சீரியல் நிலைமை என்ன ஆகும் தெரியல. ஆனா, இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த அளவிற்கு வெற்றி பெற்றதற்கு நம்ம முல்லை– கதிர் கதாபாத்திரம் தான் என்று சொன்னாங்க.

Advertisement