‘சோழர்களுக்கு பகை மறவா பாண்டியர்களின் எச்சரிக்கை’ – மதுரையில் ஒட்டப்ப போஸ்டர் . அப்படி என்ன கோபம் ? 

0
239
- Advertisement -

சோழர்களை எச்சரித்து பாண்டியர்கள் பெருமை வாய்ந்த மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் விடுத்திருக்கும் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல பேரின் கனவை, 70 ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்:

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று சொல்லலாம். மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் மதுரைக்காரர்கள் இந்த படத்தை பார்த்து பொங்கி எழுந்து கோபத்தில் அடித்த போஸ்டர் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

மதுரைக்காரர்கள் செய்த செயல்:

அதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் சோழர்களை ஹீரோவாகவும், பாண்டியன்களை வில்லன்களாகவும் காண்பித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் சோழன் தானே தமிழன் என்றெல்லாம் சொல்லி இருப்பது மதுரைக்காரங்களுக்கு மூக்கு மேல கோபம் வந்துவிட்டது. பாசம் என்றாலும் ரோசம் என்றாலும் மதுரைக்காரர்களை அடிச்சிக்க ஆளில்லை என்று சொல்வார்கள். இதனால் கோபத்தில் மதுரை வீரன் ஒருவர் சோழர்களை எச்சரித்து போஸ்டர் ஒன்று அடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சோழர்களை எச்சரிக்கும் போஸ்டர்:

அதில் அவர்,

சோழர்களே…!

பாண்டிய நாட்டுக்கு வந்தமா

மீனாட்சியை கும்பிட்டமா

தியேட்டர்ல படத்தை ஓட்டுனமா

பரோட்டாவை தின்னமான்னு

போய்கிட்டே இருக்கணும்.

அத விட்டுட்டு மறுபடியும் எதாவது எசகுபிசகா

பண்ணணும்னு நினைச்சீங்க… அப்புறம்

அவ்ளோதான்…

இப்படிக்கு பகை மறவா பாண்டியரின் வாரிசுகள் என்று கூறி இருக்கிறார்.

மதுரைக்காரர்களின் கோபத்திற்கு காரணம்:

இவருடைய கோபத்திற்கு காரணம் சினிமா துறையில் உள்ள இயக்குனர்கள் என்றே சொல்லலாம். பொன்னியின் செல்வன் எழுதிய கல்கியின் சொந்த ஊர் நாகப்பட்டினம், சோழநாடு. பொன்னியின் செல்வன் படம் எடுத்த இயக்குனர் மணிரத்தினத்தின் ஊர் மதுரை. பாண்டிய மன்னனின் தலைநகரம். செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் பாண்டியனை வில்லன்களாக காண்பித்து இருப்பார்கள். செல்வராகவன் ஊர் தேனி. இப்படி பாண்டிய நாட்டில் பிறந்தவர்களே பாண்டியனை வில்லன்களாக காண்பிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது மிகவும் வேதனைக்குரியது. அது மட்டும் இல்லாமல் பாண்டியனை ஹீரோவாக்கி ஒரு படம் எடுத்தால் தான் பாண்டியன் வாரிசுகளோட கோபத்தை தணிக்க முடியும். அப்படி ஒரு படம் வந்தால் மதுரையில் அந்த படத்தை ஓட்டி பாகுபலி ரெக்கார்டை முறியடித்து விடலாம் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Advertisement