அட, நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா இவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆடுவாரா.வீடியோ இதோ

0
4003
- Advertisement -

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. அதோடு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.

-விளம்பரம்-

இந்த பாண்டியன் ஸ்டோரில் முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனியில் தான். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், ஜெயா டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர்களிலும் நடித்து வருகிறார். இது தவிர இவர் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். இந்த படம் உலக அளவில் மிகப் பெரிய அளவில் சாதனை படைத்தது.

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக தெரிக்க விட்டது. இந்நிலையில் நடிகர் வெங்கட் அவர்கள் தளபதி விஜயின் பிகில் படத்தில் இருந்து வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக ஆடி உள்ளார். தற்போது இவர் நடனமாடிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நடிகர் வெங்கட் இவ்வளவு பிரமாதமாக நடனம் ஆடுவாரா என்று வியந்து போய் பார்த்து உள்ளார்கள். மேலும், இந்த வீடியோவை அதிகமாக ரசிகர்கள் ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement