சினிமாவுலகில் மிக பிரபல இயக்குனரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரிஷ்யம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, பேபி எஸ்தர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வசூலையும், விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என 4 மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மேலும், தமிழில் 2015 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் அவர்கள் பாபநாசம் என்ற பெயரில் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமலஹாசன், கவுதமி உட்பட பலர் நடித்திருந்தார்கள்.
மலையாளத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர் அவர்களே தமிழிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரோஷன் பஷீர் தமிழில் அறிமுகமான முதல் படமும் இது தான். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிளஸ் டூ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். ரோஷன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.
அதனால் அடிக்கடி இவர் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது இவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பாபநாச வில்லன் ரோசனா!! என்று வியப்பில் கேட்டுள்ளார்கள். அந்த அளவிற்கு இவர் அடையாளம் தெரியாத அளவுக்கு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை மாற்றி உள்ளார்.
தற்போது இவர் ஒரு புது படத்தில் நடிப்பதற்காக தான் தன்னை இப்படி மாற்றிக் கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. பாபநாசம் படத்திற்கு பிறகு இவர் தமிழில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பைரவா என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.