நடிகை பரவை முனியம்மாவை பற்றி யாரும் அறிந்து விடாமல் இருக்க முடியாது விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக நடித்ததோடு அந்தப் படத்தில் சிங்கம் போல என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை பரவை முனியம்மா தமிழ் சினிமா துறையில் நடிகையாகவும் நாட்டுப்புற பாடகி யாவும் தெரிந்த வந்த நடிகை பரவை முனியம்மா. தூள் படத்திற்கு பின்னர் காதல் சடுகுடு பூ தேவதையைக் கண்டேன் என்று 25 திரைப்படங்களுக்கு மேல் நடிகையாகவும் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்து சமையல் என்ற சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பரவை முனியம்மா, இடையில் உடல் நலம் செய்யில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். பட வாய்ப்புகள் இல்லாததால் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருந்து வந்தார் பரவை முனியம்மா. இதை அறிந்த மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ‘பரவை’ முனியம்மாவை நேரில் அழைத்து அவருக்கு ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கி மாதந்தோறும் ரூ. ஆயிரம் வட்டியாக வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால், அந்த பணமும் அவரது வைத்திய செலவிற்கே சரியாக போனது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல் நிலை மிகவும் மோசமானதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் பாருங்க : வாய்ப்புக்காக ப*** வேனும்னு சொல்லல நீ. ஆம, சொன்ன என்ன இப்போ. வெளியான தர்ஷன் சனம் ஆடியோ ஆதாரம்.
அப்போது நடிகர் அபி சரவணன் அது மட்டுமல்லாமல் நடிகர் அபி சரவணன் அவரை மருத்துவமனையில் சேர்த்து, உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்துக்கொண்டார். பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து ஆறுதல் மட்டும் கூறாமல் அவரது நிலையைக் கண்டு மனம் வருந்தி உள்ள அபி சரவணன் தனது கையிலிருந்த எட்டாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பரவை முனியம்மாவின் சிகிச்சைக்கு ஆகும் செலவு தானே ஏற்றுக் கொண்டதாகவும் கூறி இருந்தார் அபி சரவணன். தொடர் சிகிச்சை மூலம் பறவை முனியம்மா உடல் நலம் தேறி வருவதாகவும் அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் பறவை முனியம்மா குறித்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் அபி சரவணன் – வெண்பா நடிப்பில் வெளியான ‘மாயநதி’படம் அனைவரது வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இதைக் கேள்விப்பட்ட பரவை முனியம்மா, ‘மாயநதி’ படத்தை அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் பார்த்தார். நீண்ட நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மனதுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்தார். மேலும், ‘மாயநதி’ படத்தைப் பார்த்து அபி சரவணனைப் பாராட்டினார். திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்ற பறவை முனியம்மாவின் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.