எதுக்கு வெளியே போகனும் ? விடுதலை திரையரங்கில் பொங்கிய பெற்றோர்கள். கைதட்டிய ஆடியன்ஸ். என்ன ஆனது ?

0
456
- Advertisement -

விடுதலை படத்தை பார்க்க சென்று சிறுவர்களை பாதியிலேயே திரையரங்கில் இருந்து போலீசால் வெளியேற்ற முயற்சி செய்யபோது பெற்றோர்கள் சண்டையிட்டு இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

விடுதலை படம்:

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார்.

போலீஸ் செய்த செயல்:

போலீஸ் அதிகாரியான சூரி மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே விடுதலைப் படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கம் ஐனாஸ் திரையரங்கில் விடுதலை திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. இந்த படத்தைக் காண 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்:

அப்போது படத்தை பாதியிலேயே நிறுத்தி போலீசார் திரையரங்கில் இருந்து சிறுவர்களை வெளியேற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள், மக்களின் வலியை புரிந்து கொள்ளும் படங்களை சிறுவர்களுக்கு காட்டுவதில் என்ன தவறு? தேவையில்லாத கவர்ச்சி படங்களையும், தவறு தூண்ட செய்யும் படங்களை எல்லாம் திரையரங்கில் போடுகிறீர்கள். அப்போது யாரும் சிறுவர்களை வெளியேற்ற முயற்சி செய்வதில்லை.

வைரலாகும் வீடியோ:

மக்களின் வலியை உணர்த்தும் படங்களை பார்க்கும்போது மட்டும் சிறுவர்களை வெளியேற்றுவதா? என்று போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பிறகு போலீசார் திரையரங்கை விட்டு வெளியே சென்றவுடன் மீண்டும் விடுதலை படம் திரையிடப்பட்டிருந்தது. தற்போது இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ரோகினி திரையரங்கில் நரிகுறைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement