நாயை கண்டுபிடித்தால் இத்தனை லட்சம் பரிசாம் – நடிகை அறிவிப்பால் பரபரப்பு.

0
197
paris
- Advertisement -

தன்னுடைய நாயை கண்டுபிடித்து தந்தால் இத்தனை லட்சம் பரிசாக தருவதாக ஹாலிவுட் நடிகை அறிவுத்திருக்கும் அறிவிப்பு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக செல்லப்பிராணிகளும் வளர்கிறது. குறிப்பாக, நாய், பூனை, பறவைகள் எல்லாம் வீட்டில் மனிதர்களோடு மனிதர்களாக வளர்க்கப்பட்டு வருகிறது. அதுவும் பிரபலங்கள் மிகவும் காஸ்ட்லியான நாய், பூனைகளை வளர்த்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மனிதர்களை விட செல்லப் பிராணிகள் மீதுதான் அதிகம் பாசமும் வைத்து வளர்க்கிறார்கள். அப்படி அவர்கள் வளர்க்கப்படும் பிராணிகள் காணாமல் போய்விட்டால் அவற்றை குறித்து விளம்பரங்களையும், போஸ்டர்களையும் வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் ஹாலிவுட் நடிகையின் நாய் காணாமல் சென்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

- Advertisement -

ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன்:

ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பாரிஸ் ஹில்டன். இவர் நடிகை மட்டுமில்லாமல் பாடகி, மாடல், ஊடகப் பிரபலம், கதை ஆசிரியர், பேஷன் வடிவமைப்பாளர் என பன்முகத் தன்மைகளைக் கொண்டு திகழ்கிறார். இவர் நியூயார்க் நகரத்தில் பிறந்தவர். இவர் தான் தன்னுடைய நாயை காணவில்லை என அறிவிப்பு அறிவித்திருக்கிறார்.

ஹாலிவுட் நடிகை அறிவித்த பரிசு தொகை:

இவருடைய நாயின் பெயர் டைமண்ட். இவருடைய டைமண்ட் நாய் ஒரு வாரமாக காணவில்லை. இது இவருக்கு மிகவும் மன வலியை அளிக்கிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும். இந்த நாயை கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசுத் தொகையாக 10 ஆயிரம் டாலர் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். அதாவது. இந்திய ரூபாய் மதிப்பில் 8,12,555 ருபாய் ஆகும்.

-விளம்பரம்-

ஹாலிவுட் நடிகை அறிவித்த அறிவிப்பு:

ஹாலிவுட் நடிகை அறிவித்த அறிவிப்பில் நாயைக் கொண்டு வந்து கொடுத்தாலோ அல்லது கண்டுபிடித்த தகவல் கொடுத்தாலே எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவர் பத்தாயிரம் டாலர் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இப்படி இவர் அறிவித்திருக்கும் அறிவிப்பு சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஓரு நாய்க்கு இவ்வளவு லட்சமா! என்று வாயை பிளந்து இருக்கிறார்கள்.

Advertisement