சமீப காலமாகவே சோசியல் மீடியா மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள். நடிப்பதற்கு சோசியல் மீடியா ஒரு பிளாட்பார்ம் ஆக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா நடிப்பதற்கு வாய்ப்புகள் மட்டுமின்றி பணம் சம்பாதிப்பதற்கும் வழிவகை செய்கிறது. மேலும், சமூக வலைத்தளங்களின் மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

அந்த வகையில் யூடியூபில் வீடியோ போடுவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த அளவுக்கு இவர்களின் சேனல் இளைஞர் ரசிகர்களை கொண்டவர்கள் என்று சொல்லலாம். ட்ரெண்டிங் விஷயத்தை கலாய்த்து வீடியோ போதாவது இவர்களது ஸ்டைல். அதே சமயம் சினிமாக்களையும் கலாய்த்து வீடியோ போட்டு வருகின்றனர்.

Advertisement

அனிமல் படம்:

அந்த வகையில் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தை கலாய்த்து வீடியோ பதிவிட்டு இருக்கின்றனர். சமீபத்தில் பாலிவுட்ட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அனிமல் . சந்தீப் வாங்கா இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா-ரன்பீர் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை :

மேலும், டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் சமீபத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. படத்தில் தன்னுடைய தந்தை மீது மகன் ஒருவன் அதிக பாசம் வைத்திருக்கிறார். இவர் தன்னுடைய தந்தையின் அன்பிற்காக எந்த எல்லைக்கும் செல்வதே படத்தின் கதை. இதில் மகனாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார்.

Advertisement

அவருடைய தந்தையாக அணில் கபூர் நடித்திருக்கிறார். ரன்பீர் கபூர் சிறுவயதிலிருந்தே இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக அணில் கபூர் இருக்கிறார்.இவர் தன்னுடைய மகனை எதற்கெடுத்தாலும் பயங்கரமாக திட்டுகிறார். ஆனால், தன்னுடைய தந்தை எவ்வளவு காயப்படுத்தினாலும் அவர் மீது அதிக அன்பை கொட்டுகிறார் ரன்பீர் கபூர். தந்தை மகனுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

Advertisement

1000 கோடி வசூல் :

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதோடு படத்தில் ராஸ்மிகா மந்தனா பயங்கர கிளாமராக நடித்து இருக்கிறார்.மேலும், இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழி ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 1000 கோடியை வசூல் செய்து இருந்தது. ஆனால், சிலர் இந்த படம் பெண்களுக்கு எதிரானது, படம் முழுவதும் ஆண் சிந்தனை இருப்பதாக விமர்சித்திருக்கின்றார்கள்.

Advertisement