ஒரு மாசத்துக்கு முன்னாடியே எங்களுக்கு போன் பண்ணாங்க – போலி டாக்டர் பட்டம் குறித்து பரிதாபங்கள் கோபி

0
1033
- Advertisement -

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் போலியான டாக்டர் பட்டங்களை கொடுத்ததாக தற்போது எழுந்துள்ள புகார் தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. வைகை புயல் வடிவேலுவுக்கு நேற்று ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பிரிவின் கீழ் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இதேபோல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதை பாராட்டும் பொருட்டு துணை நடிகர் கோகுலுக்கு சிறப்பு விருதும் கொடுக்கப்பட்டது. முன்னதாக இந்த அமைப்பு சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை நடிகர் நடிகர் ராகவா லாரன்ஸிற்கு வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. யூடியூபில் வீடியோ போடும் கோபி மற்றும் சுதாகருக்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த படங்களை கொடுத்த அமைப்பு போலியானது என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதாவது மோசடி செய்த நபர்கள் தங்களை சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்று கூறி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் கொடுப்பதாக அழைப்பிதழ்களில் பெரிதாக அச்சிட்டுள்ளனர். மேலும் அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரையை சட்டவிரோதமாக அந்த அழைப்பிதழில் அச்சிட்டு ஓய்வு பெற்ற நீதிபதியை தற்போதய நீதிபதி என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் தங்களுக்கு அண்ணா பல்கலை கழகமே டாக்டர் வழங்குவதாக வந்தவர்கள் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் ஏமாந்து விட்டனர்.

வள்ளிநாயகம் கூறியது :

இந்நிலையில் இதுகுறித்து பட்டம் வழங்கிய ஓய்வு பெற்ற வள்ளிநாயகம் அவர்களை கேட்டபோது இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நான் கடிதம் போடவில்லை. உண்மையில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்ச்சி நடக்க இருப்பதாக கூறியதால் மட்டுமே நான் இதை கலந்து கொண்டேன் என்று அவர் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அண்ணா பலகலை கழகம் துணை வேந்தர் :

இதுகுறித்து அண்ணா பலகலை கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில் இந்த அரங்கத்தில் வைத்து இப்படி ஒரு சட்ட விரோதமான செயல் நடந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பெயர் இருந்ததால் மட்டுமே நாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தோம். அண்ணா பல்கலைக்கழகம் என்பது புனிதமான இடம், அதுவும் விவேகானந்தா அரங்கம் மிகவும் பழமையானது இந்த அரங்கத்தில் வைத்து இப்படி ஒரு காரியம் நடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் இது குறித்து காவல் துறையில் புகாரளித்துள்ளதாக தெரிவித்தார்.

பரிதாபங்கள் கோபி கூறியது :

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல யூடியூப் சேனல் பிரபலம் பரிதாபங்கள் கோபி கூறுகையில் “எங்களை இவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே போனில் அழைத்து பேசினர். அதற்கு பிறகு என்னுடைய மேலாளர் தான் அவர்களிடம் பேசினார். நாங்கள் அதிகமாக எந்த பெரிய நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டோம் ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் என்ற ஒரு வார்த்தையை நம்பி ஏமாந்து விட்டோம் என்றும் தவறு செய்த்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நபர்கள் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளனர்.

Advertisement