இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு போன்ற பல்வேறு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தார்கள். அதேபோல இந்த படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை சுகந்தி. இந்த படத்தில் பரியனின் தேவதையாக வரும் ஆசிரியர் தான் நடிகை சுகந்தி.
இவர் பரியேறும் பெருமாள் படத்தின் போது அளித்த ரீ வைண்டு பேட்டி தான் இது. சொன்னால் நம்பமாட்டீங்க, நான் படிச்சது நர்சிங். பாண்டிச்சேரியில் என்.ஜி.ஓ வொர்க் பண்ணிட்டிருந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன். அவங்களுக்கு ஆக்டிவிட்டிஸ் செய்யறதுக்குப் பணத்தட்டுப்பாடு வந்துச்சு. அந்த டைம்ல, பக்கத்தில் ஒரு பிரெஞ்சு படத்தின் ஷூட் போய்டிருந்துச்சு. என் ஃப்ரெண்ட்ஸ், அங்கே போய் ஏதாவது ட்ரை பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு அதுல பெருசா ஆர்வம் இல்லாட்டியும் குழந்தைகளுக்காகப் போனேன்.
அங்கே டிரான்ஸ்லேஷன் வொர்க் கிடைச்சது. ஒருநாள் ஒரு வசனத்தைச் சொல்லிக்காட்டும்போது, டைரக்டர் என்னையே நடிக்கச் சொல்லிட்டார். `பிலிவ்’ என்ற அதுதான் என் முதல் குறும்படம்.பிறகு, பரியேறும் பெருமாள்’ ஆடிசனுக்கு இரண்டு தடவை போனேன். மாரி செல்வராஜ் சார் முதல்ல என்னை நம்பவேயில்லை.தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என் படத்துக்கான இயல்பான நடிப்பைத் தரமுடியுமானு தெரியலை. இது எனக்கு ரொம்ப முக்கியமான கதாபாத்திரம்’னு சொன்னார். ஆனால், நான் தொடர்ந்து முயற்சி பண்ணி அந்த வாய்ப்பை வாங்கிட்டேன்.
நான் ரொம்ப விரும்பி அமைச்சுக்கிட்ட சொந்த வாழ்க்கை, ஆலன் ராபர்ட். நான் ரொம்ப நேசிக்கும் அன்பான கணவர். 6 வயசு வரை நான் பாண்டிச்சேரில்தான் வளர்ந்தேன். அதன்பிறகு பிரான்ஸ்ல செட்டில் ஆகிட்டோம். அங்கேதான் ஆலனை மீட் பண்ணினேன். அவர் க்ளினிக்ல டிரெயினிங்காகப் போயிருந்தேன். நட்பு காதலாச்சு. எனக்கும் ஆலனுக்கும் 10 வயசு வித்தியாசம் என்று கூறியுள்ளார் தேவதை டீச்சர் சுகந்தி.