பரியேறும் பெருமாள் திரைவிமர்சனம்..!

0
123
- Advertisement -

புதுமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில், நடிகர்கள் கதிர், கயல் ஆனந்தி நடித்துள்ள “பரியேறும் பெருமாளின்” விமர்சனத்தை இங்கே காண்போம்.

படம்:-பரியேறும் பெருமாள்
இயக்குனர் :- மாரி செல்வராஜ்
நடிகர்கள்:- கதிர், கயல் அனந்தி, யோகி பாபு
தயாரிப்பு :- நீலம் ப்ரோடுக்ஷன்ஸ் (பா. ரஞ்சித்)
வெளியான தேதி:- 28-09-2018

- Advertisement -

கதைக்களம்:
இந்த படத்தின் கதாநாயகனாக இருக்கும் பரியன், ‘பரியேறும் பெருமாள் பிஏ பிஎல் மேல ஒரு கோடு ‘என்று தன்னை அறிமுகம் செய்யும் வகையில் இந்த படத்தின் கதை ஆரம்பிக்கிறது. இந்த படத்தில் முழுக்கு முழுக்க மேல் ஜாதி மற்றும் கீழ் சாதியினருக்கு இடையேயான தீண்டாமை மற்றும் ஆதிக்கதை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை அமைத்துள்ளார் இயக்குனர் மாறி செல்வராஜ். படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘உங்கப்பனும், எங்கப்பனும் எப்போ இவங்ககிட்ட கை கட்டி வேல செய்றத நிறுத்தறாங்களோ அப்போது தான் இதெல்லாம் மாறும் ‘என்ற வசனம் மூலமே இது மேல்சாதியினரால் ஒதுக்கப்பட்டுவரும் கீழ் சாதியினரை பற்றி கதைக்களம் என்பதை நமக்கு உறுதிபடுத்திவிடுகிறது.

kathir

படத்தின் ஹீரோவான பரியன் வழக்கறிஞ்சராக வேண்டும் என்று ஆசைபட்டு கல்லுரியில் சேர்கிறார். கல்லூரியில் ஆங்கில மொழியால் அவர் படும் அவதைகளும், ஆங்கிலம் தெரியாமல் அதனை நியப்படுத்தும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றது. கல்லூரியில் கதிருக்கு ஆங்கிலம் கற்றுத்தர உதவும் ஒரு சக மாணவியாக ஜோதி (ஆனந்தி) இருக்கிறார். இவர்களுடன் யோகிபாபுவும் மாணவனாக இருக்கிறார்(ஆம், யோகி பாபு லா கல்லூரி மாணவன் நம்பித்தான் ஆகா வேண்டும்). நாளடைவில் கதிருக்கும், ஆனந்திக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டு விடுகிறது.

ஆனால், ஜோதி மேல் சாதி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பரியனை மேல் சாதி சமூகத்தினர் கயலுடன் பழக கூடாது என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இறுதியில் பரியை கொலை செய்ய முடிவு செய்கின்றனர் மேல் சாதி சமூகத்தினர். கீழ் சாதியினரை கொடுமை செய்யும் மேல் சாதியினருக்கு பரியன் எப்படி முகத்தில் அறைந்து பதில் அளிக்கிறார் என்பது தான ் கதை.

ப்ளஸ்:

ஜாதி பிரச்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சமீபத்தில் நடைபெற்ற கவுரவ ஜாதி கொலை பற்றியும் நமக்கு உணர்த்துகிறது. சமீபத்தில் ஜாதிவிட்டு ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட கௌசல்யா, சந்கர் பிரச்சனைகளை நம் கண் முன்னே நிறுத்தும் காட்சியும் சரி, தனது மகளை ஜாதிக்காக கொலைசெய்த தந்தை “குல சாமிக்கு செய்யும் சேவை” என்று கூறும் வசனம் இன்னும் ஜாதிக் கொலைகள் நம் நாட்டில் நடந்து வருகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

அதே போல படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளது படத்தின் பலம். சந்தோஷ் நாராயணின் இசை படத்தின் காட்சிகளோடு ஒன்றிணைந்து படத்திற்கு உயிர் கூட்டியுள்ளது. வழக்கறிஞ்சராக வரவேண்டும் என்று ஆசைபடும் ஹீரோ கல்லூரியில் தலைமை ஆசிரியருடன் செய்யும் வாக்கு வாதங்கள் சிரிப்பையும், சிந்தனையும் நமக்கு தருகிறது. அதே போல மருத்துவமனையில் பரிக்கு அவரது அம்மாவிற்கும் இடையே நடக்கும் செண்டிமெண்ட் காட்சிகளில் கதிரின் நடிப்பு மெய் சிலிர்க்கவைக்கிறது.

மைனஸ்:

பொதுவாக ரஞ்சித் இயக்கும் படங்களில் தான் குறிப்பிட்ட ஜாதி பற்றிய பிரச்சனைகளை மையமாக கொண்ட கதைக்களமாக அமைந்திருக்கும். தற்போது அவர் தயாரித்துள்ள படத்திலும் கீழ் ஜாதி பிரச்சனையை மையமாக கொண்ட கதையை தேர்ந்தெடுத்துள்ளது சற்று சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தவறு ஒன்றும் இல்லை என்றாலும் படத்தில் ஒரு காட்சியில் கீழ் ஜாதி குளிக்கும் தொட்டியில் மேல் சாதி இனத்தினர் சிறு நீர் கழிக்கும் காட்சியை காணும் போது இவையெல்லாம் இன்னும் நடக்கிறதா என்ற கேள்வி நமக்கு நிச்சயம் எழும். மற்ற மற்றபடி பெரிதாக குறை ஒன்றும் இல்லை.

இறுதி அலசல்:

இந்த படத்தில் சொல்ல வந்த விடயத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தெளிவாக நமக்கு திரையிட்டு காட்டியுள்ளார். ஜாதி பெயரை கூறிக்கொண்டு இன்னும் மார் தட்டிக்கொண்டிருக்கும் சில ஜாதி வெறியர்களுக்கு இந்தப்படம் ஒரு சௌக்கடியாக அமையும்.மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies அளிக்கும் மதிப்பு 3.8/5

Advertisement