வறுமையில் வாடிய பரியன் தந்தைக்கு சொந்த வீடு – நெகிழ்ந்துபோன நாட்டுப்புறக் கலைஞர். இதற்கு யார் காரணம் தெரியுமா ?

0
668
Pariyerum
- Advertisement -

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கரகாட்டக் கலைஞருக்கு புதிய வீடு கிடைத்து இருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு போன்ற பல்வேறு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தார்கள். அதேபோல இந்த படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த பல நடிகர்கள் இருக்கின்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒருவர் பரியனின் தந்தையாக நடித்த தங்கராஜ்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கலைக் கூத்தடியாக வரும் இவர் கூத்துக்களில் பெண் வேடம் போட்டு ஆடுவதால் நிஜத்திலும் பெண்னை போன்ற நயனத்தை பெற்று இருப்பார். மேலும், இந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்தும் இருப்பார். இதனால் இந்த பட விழாவில் இவரது காலில் விழுந்து வணங்கினார் இந்த படத்தில் ஆனந்தியின் தந்தையாக நடித்த நடிகர் மாரிமுத்து.

- Advertisement -

சேதமடைந்த வீடு :

நடிகர் தங்கராஜை இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு கிராமத்தில் இருந்து தான் அழைத்து வந்தார். இவரை இரவில் வெள்ளரிக்காய் தோட்டத்தில் காவலுக்காக படுத்துக் கொண்டு இருந்தவரை எழுப்பி ஒப்பாரி பாடலை பாட வைத்து பின்னர் இவரை இந்த படத்திற்காக தேர்வு செய்தார் மாரி செல்வராஜ். இப்படி ஒரு நிலையில்  நெல்லையில் வசித்து வரும் தங்கராஜ், சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அவருடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது.

வறுமையில் வாடிய தங்கராசு :

பரியேறும் பெருமாள் படத்திற்கு பின்னர் நடிகர் தங்கராஜுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் தெருக்கூத்துகள் வேடம் கட்டி ஆடுவதையும் நிறுத்தி விட்டாராம். மேலும், இரண்டு மகள்களையும் படிக்க வைத்துவிட்ட இவர் குடும்ப கஷ்டம் காரணமாக மனைவியுடன் சேர்ந்து எலுமிச்சை, பனங்கிழங்கு போன்றவற்றை தன்னுடைய கிராமத்தில் காய் கறி விற்று பிழைத்து வந்து உள்ளனர்.

-விளம்பரம்-

தங்கராசுக்கு புதிய வீடு :

ஆனால், இடையில் அந்த வியாபாரம் முடங்க ஒரு வேளை உணவுக்குக் கூட மிகவும் கஷ்டப்பட்டுவந்துள்ளார். அவருடைய வீட்டை சீரமைத்து தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் தங்கராஜுக்கு புதிய வீடு கிடைத்துள்ளது. மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புகள், தமுஎசக மற்றும் நண்பர்களின் உதவியுடன் நாட்டுப்புற கலைஞர் தங்கராசுக்கு வீடு கட்டப்பட்டது.

அம்பேத்கர் பிறந்தநாளில் நடந்த விஷயம் :

அந்த வீட்டுக்கான சாவியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று தங்கராசு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் பரியேறும் பெருமாள் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், வட்டாட்சியர்கள் செல்வன், மாரிராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தங்கராசு, புதிய வீட்டில் குடியேறி இருப்பது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement