தேசிய விருது வாங்கியது பற்றி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 71 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது. இன்று 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசிலக்கப்பட்டு இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட படங்களுக்கு தான் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறந்த நடிகராக ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கானுக்கு இதுதான் முதல் முறைதேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த படமாக 12th பைல் படம் தேர்வு செய்யப்படுகிறது.
71வது தேசிய விருது:
சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகி இருக்கிறார். மேலும், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தின் பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி பிரகாஷ் பெற்றிருக்கிறார். இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்தது வாத்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பார்க்கிங் படம் பிடித்து இருக்கிறது. அதோடு பார்க்கிங் படம் சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது.

பார்க்கிங் படம்:
பின் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் எம்.எஸ் பாஸ்கர் பெற்றிருக்கிறார். மொத்தம் மூன்று விருதுகளை பார்க்கிங் படம் பெற்று இருக்கிறது. மூன்று விருதுகள் பெற்றிருப்பதால் பார்க்கிங் படக்குழு மகிழ்ச்சியிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக படத்தினுடைய படத்தின் இயக்குனர் ராம் குமார் பாலகிருஷ்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் வீடியோ:
அதில் அவர், பார்க்கிங் திரைப்படம் தேசிய விருதுகள் வரை சென்றிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக ஆதரவளித்த மக்களுக்கும் ஊடகத்தினருக்கும் நன்றி. பார்க்கிங் படம் வெளியான போது வெள்ளம் வந்திருந்தது. அந்த சூழலிலும் திரையரங்களில் படத்தைப் பார்த்து பல பேர் பாராட்டியிருந்தார்கள். ஓடிடியில் கிடைத்த வெற்றிக்கு பிறகு தான் தேசிய விருது என்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நான் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
Forever grateful 🙏❤️#Parking #NationalAward2023 #Nationalawards pic.twitter.com/suD4FjXhTZ
— Ramkumar Balakrishnan (@ImRamkumar_B) August 1, 2025
நன்றி சொன்ன இயக்குனர்:
இந்த படத்தில் நடித்த கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் கொடுத்த ஆதரவு தான் இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கின்றது. ஒரு சிறிய ஐடியாவை படமாக மாற்ற முடியும் என நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த நம்ப முடியாத அங்கீகாரத்தை ஒரு பொறுப்புணர்வாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களுக்கும் கடத்துவேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிம்புவின் 49 படத்தை இயக்கிய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






