சினிமாவை பொறுத்தவரை ஒரே ஷாட்டில் ஒரு ஐந்து நிமிட காட்சியில் நடித்தாலோ அல்லது ஒரு பாடல் காட்சியில் இரண்டு மூன்று நிமிடங்கள் நிற்காமல் ஆடினாளே பெரிய விஷயமாக பார்க்கப்படும். அப்படி இருக்கையில் ஒரு படத்தையே ஒரே ஷாட்டில் படமாக்கி அதுவும் Non – liner சிங்கிள் ஷாட் படமாக கொடுத்து உலக சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உயர்ந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்ட படைப்பை கொடுத்திருக்கிறார் பார்த்திபன். பார்த்திபன் படம் என்றாலே பெரும் எதிர்பார்பு அவர் ரசிகர்களிடம் மட்டுமில்லாம் அனைவருடத்திலும் இருக்கும்.
இயக்குனர் பார்த்திபன் படத்தில் வேலை செய்வது என்பது மிகவும் கடினமான ஓன்று. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் 15வது ஒளிப்பதிவாளராக சேர்க்கப்பட்டார். இவருக்கு முன்னால் 14 ஒளிப்பதிவாளர்கள் வந்து படத்தை பார்த்து மிரண்டு ஓடிவிட்டார். அதில் பாதி பேர் படத்தின் கதையை கேட்ட உடனே ஓடிவிட்டனர். மீதி சிலர் இரவின் நிழல் படப்பிடிப்பு தொடங்கிய பின் ஓடிவிட்டனர். இதில் முக்கியமான ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், ரத்தினவேலு ,ரவிவர்மன் போன்ற ஜாம்பவான்கள் முடியாமல் திணறி ஓடியது ஆச்சரியப்படுத்துகிறது.
இதையும் பாருங்க : 90ஸ் கிட்ஸ்ஸின் பேவரைட் சீரியல் மர்மதேசத்தில் நடித்த குட்டி ராசுவ ஞாபகம் இருக்கா ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க.
இரவின் நிழல் படத்தின் சுவாரஸ்யமான தகவல்கள் :-
Non-liner கதை என்பதால் ஒரே இடத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் கதைகளுக்கு ஏற்றது போல் 64 ஏக்கரில் 50 அரங்குகளில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு அறையிலும் வெயில்,மழை என வானிலை மாறியது.
பார்த்திபன் இயக்கிய படங்களில் அதிகாலை காட்சி போடப்பட்ட முதல் படம் இரவின் நிழல் தான் ரசிகர்களிடம் இந்த படத்திற்கு இருந்த அதிகப்படியான எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு ஜூன் 15 தமிழக முழுவதும் திரைஅரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன.
டச்சப் பையனுக்கு வாய்ப்பு :
பார்த்திபன் அவர் படத்தில் எப்பொழுதும் அவர் மனதில் பட்டவரை நடிக்க வைத்து விடுவார். பார்த்திபனின் கதையின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் முகம் இருந்தால் போதும் அவர் படத்தில் இடம் பெறலாம். இதற்கு எடுத்துக்காட்டாக இந்தப் படத்தில் ஒரு நடிகையின் டச்சப் பையனை பார்த்து பிடித்துப் போக இந்த படத்தின் பார்த்திபனின் சிறு வயது தோற்றத்தில் அந்தப் பையனை நடிக்க வைத்து விட்டார். அந்தப் பையனுக்கும் சினிமா வாழ்க்கை இனிதே தொடங்குகிறது.
கழுதைக்கு 9 லட்சம் சம்பளம் :
பார்த்திபன் படம் என்றாலே பொதுவாக பட்ஜெட் கம்மியாகத்தான் இருக்கும். செலவும் அதிகம் பண்ணமாட்டார். ஆனால் இந்தப் படத்தில் ஒரு கழுதையின் கதாபாத்திரத்திற்காக ஒன்பது லட்சம் சம்பளமாக வழங்கியுள்ளார் இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த கழுதையின் கால்சீட் 90 நாட்கள். இரவின் நிழல் படத்தில் ஆஸ்கார் விருது வென்ற மூன்று பேர் வேலை செய்துள்ளனர்.
புதிய பாதை :
தன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை எண்ணி மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கும் பார்த்திபன், தன் முதல் படமான புதிய பாதை படத்தின் போது சந்தித்த சவால்கள் குறித்து பேசி இருக்கிறார். புதிய பாதை படம் வெளியாகும் போது தான் ரஜினியின் சிவா, கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படமும் வெளியாகி இருக்கிறது. இதனால் டிஸ்டிரிபுயூட்டர்கள் சிலர் இந்த படத்திற்கு எதிராக உங்க படத்தை ரிலீஸ் செய்ய எவ்ளோ திமிர் இருக்கும்னு படத்தை திருப்பி கொடுத்துவிட்டார்கள். அதையும் மீறி நான் படத்தை ரிலீஸ் செய்தேன் என்று கூறியுள்ளார்.