விஜய் அரசியல் குறித்து நடிகர் பார்த்திபன் பேசி இருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.
இந்த படத்தை தற்போது ‘தளபதி 69’ என்ற படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். கேவிஎன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் பீஸ்ட் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் அரசியல்:
இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை போடப்பட்டது. இதை அடுத்து இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இவர் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார்.
விஜய் குறித்த தகவல்:
இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்திருந்தார். அதன் பின் இவர் அம்பேத்கர் புத்தக விழாவில் கலந்து இருந்தார். அதில் இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். சமீபத்தில் கூட இவர் பரந்தூர் விமானநிலையம் எதிர்ப்பு போராட்டத்தில் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார். இப்படி நாளுக்கு நாள் விஜய்யின் அரசியல் பயணம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
பார்த்திபன் :
இந்த நிலையில் விஜய் அரசியல் குறித்து நடிகர் பார்த்திபன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் எல்லாத்தையுமே பாஸிட்டிவாக பார்ப்பேன். நான் என்ன சொல்றேன் என்றால் நண்பர் விஜய்க்கு இப்போ அரசியலுக்கு வர வேண்டும் என்கிற அவசியமே கிடையாது. அவர் ஒரு பெரிய ராஜாங்கம் நடத்திட்டு இருக்கார். அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தான். கலெக்ஷன் மன்னரும் அவர் தான். அவருக்கு 200 கோடி சம்பளம். இந்த மாதிரி ஒரு சிம்மாசனத்தை விட்டுட்டு எதற்காக மக்கள் பிரச்சினைக்காக அவர் போகணும். அப்படி என்றால் அவர் ஏதோ நல்லது செய்ய வேண்டும் என்று விருப்பப்படுகிறார். ஆனால், நம்ம எல்லாரும் அவரை இப்பவே தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, நம்ம எல்லாமே அவருக்கு சப்போர்ட் செய்துவிட்டால், மாற்றம் ஒன்று தான் மாறாதது.
விஜய் அரசியல் பற்றி சொன்னது:
கடைசி வரைக்கும் இவங்க தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றோ, இவங்க எல்லாம் ஆட்சிக்கு வரக்கூடாது என்றோ யாருமே கிடையாது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் என்கிற ஜனநாயகத்தில், விஜய் செய்கிற விஷயங்களை ஏற்கனவே சில நடிகர்கள் செய்து, பின்பு பின் வாங்கினதால அவர் மேல அந்த சந்தேகமும் இருக்கு. இப்படி தான் பேசுவாங்க இதுக்கு அப்புறம் அவங்க ஸ்ட்ராங்கா இருப்பாங்களா இருக்க மாட்டாங்களா என்று. அந்த சந்தேகம் எல்லாருக்கும் இருக்கும்போது, நம்மளும் அந்த சந்தேகத்தை ஊதி பெருசாக்கி, ஒருத்தர் நல்லது செய்ய வரும்போது எதற்கு நம்ம பயமுறுத்தணும். அதனால் விஜய் இதில் நல்ல முனைப்போடு செயல்பட வேண்டும் என்று தான் என்னுடைய விருப்பம் என்று கூறி இருக்கிறார்.