நீ எதும் தப்பா பேசல சார், ரேகா நாயர் விஷயத்தில் பயில்வானுக்கு போன் செய்துள்ள பார்த்திபன். வெளியான ஆடியோ.

0
784
rekhanair
- Advertisement -

ரேகா நாயருக்காக நடிகர் பார்த்திபன் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். அகிரா புரோடக்சன் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது.

- Advertisement -

இரவின் நிழல் படம்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் நட்ட நடுரோட்டில் இரவின் நிழல் பட நடிகை ரேகா நாயர் அவர்கள் பயில்வான் ரங்கநாதன் இடம் சண்டை போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இரவின் நிழல் படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் அரை நிர்வாணமாக நடித்தவர் நடிகை ரேகா நாயர். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ரேகா நாயர்:

இந்த நிலையில் இரவின் நிழல் படத்தில் ரேகா அரை நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சித்திருந்தார். இதனால் கடுப்பான ரேகா நாயர் சில தினங்களுக்கு முன் திருவான்மியூர் பீச்சில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனை வழிமறித்து, நான் நிர்வாணமாக நடித்தேனா? உனக்கு என்ன ப்ரச்சனை? பிச்சுருவேன், செருப்பு பிஞ்சிரும் என்று கண்ட மேனிக்கு திட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

ரேகா நாயர் – பயில்வான் ரங்கநாதன் சண்டை:

இப்படி ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனிடம் சண்டையிட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் படு வைரலானது. இந்த நிலையில் ரேகா உடனான மோதல் குறித்து பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ரேகா நாயர் பேசியது குறித்து பார்த்திபனிடம் பேசினேன். அதனைக் கேட்ட பார்த்திபன், ரேகா நாயர் பேசியதும், நடந்து கொண்ட விதமும் தவறு. மேலும், என்னுடைய படத்தை பிரிகிடாவும், ரேகா நாயரும் சேர்ந்து நிர்வாண படம், ஆபாச படம் என்று வேறு மாதிரி பேசி வருவது மன உளைச்சலை தருகிறது.

மன்னிப்பு கேட்ட பார்த்திபன்:

எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும் படத்திற்காக ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதம் வேதனை அளிக்கிறது. ரேகா நாயர் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பார்த்திபன் சொன்னார். ரேகாவுக்கு எதிராகவும், எனக்கு ஆதரவாகவும் பேசிய பார்த்திபனுக்கு நன்றி என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் கூட சேரி என்றாலே கெட்ட வார்த்தை தான் பேசுவார்கள் என்று பிரகிடா கூறிய கருத்து சோஷியல் மீடியாவில் சர்ச்சையானது தொடர்ந்து பார்த்திபன் பகிரங்க மன்னிப்பு கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement