தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரன், பார்த்திபன், சமுத்திரகனி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் கேமியா ரோலில் பார்த்திபன் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இட்லி கடையில் நானும் ஒரு பாத்திரமாக அதுவும் கைதட்டல் வாங்கும் ஒரு பாத்திரமாக இருந்ததில் எனக்கு சந்தோஷம். அகிம்சை வெல்லும் என இன்று மகாத்மா காந்தி கூட ஒரு திரைப்படம் எடுக்க தயங்குவார்.
பார்த்திபன் பதிவு:
காரணம் ரத்தம்தான் box office-ன் வண்ணமாகவே உள்ளது. பூவிற்கு தன் வேரின் பெருமையை சொல்வது போல, பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றோரையும் பூர்வீகத்தையும், குலதெய்வத்தையும் அடையாளப்படுத்தைம் விதமாய் செய்திருப்பது மெச்சத் தகுந்தது. கண்கலங்கியது பல இடங்களில். நண்பர் இளவரசு பாத்திரமாகவே பிரகாசித்தார். இட்லியிலிருந்து வரும் ஆவி போல் ஜீவி இசையை ச்சுடச்சுட வழங்கியிருக்கிறார். தனுஷை தலை மேல் வைத்து கொண்டாடலாம் என்று கூறி இருக்கிறார்.
படத்தின் கதை:
தனுஷின் தந்தை ராஜ்கிரன் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து ஒரு கிராமத்தில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் காலையில் எழுந்து ராஜ்கிரண் கோயிலுக்கு சென்று ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மி கல்லில் சட்னி அரைத்து ஒரு சிறிய கூரை வீட்டில் தான் தன்னுடைய இட்லி கடையை நடத்தி வருகிறார். அந்த ஊருடைய அடையாளமாகவே ராஜ்கிரன் இட்லி கடை தான் இருக்கிறது. அதோடு தனுஷ் குண்டு செட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது என்று நினைத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்புகிறார். வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பெரிய நிறுவனராக சத்யராஜ் இருக்கிறார்.

அவருடைய நிறுவனத்தில் ஒரு பெரிய பொறுப்புக்கு தனுஷ் செல்கிறார். அதற்குப்பின் சத்யராஜின் மகளை தனுஷ் கல்யாணம் செய்ய நினைக்கிறார். சத்யராஜின் மகன் தான் அருண் விஜய். அவருக்கு தன் தங்கையை தனுஷுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதில் விருப்பமே இல்லை. அப்போதுதான் தன்னுடைய தந்தை இறந்த செய்தி தனுஷுக்கு தெரிகிறது. அதைக் கேட்டவுடன் திரும்பவும் தனுஷ் தன்னுடைய சொந்த ஊருக்கே வருகிறார். தனுஷ், சத்யராஜின் மகளை திருமணம் செய்து கொண்டாரா? தன்னுடைய அப்பா நேசித்த இட்லி கடையை தனுஷ் எடுத்து நடத்தினாரா? தனுசுக்கும் அருண் விஜய்க்கும் இடையே என்ன பகை? என்பது தான் படத்தின் மீதி கதை.






