தேசிய விருது குறித்து தனது ஆதங்கத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார் பார்த்திபன். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் 2019-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. டெல்லியில் நேற்று 67 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். இந்த விழாவில் மொழிவாரியாக விருதுகள் வழங்கப்பட்டது.

இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. அதே போல் பார்த்திபன் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்திற்காக சிறந்த சவுண்ட் எஃபெக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனக்கு கிடைத்த தேசிய விருது குறித்து பேட்டியில் பேசி உள்ளார்.

Advertisement

அதில் அவர் கூறியது, உண்மையாக சொல்வதென்றால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுகள் ஒரே படத்துக்கு நிறைய விருதுகள் கொடுப்பார்கள். அதுபோல இந்த படத்திற்கு சிறந்த நடிகர் விருது உட்பட இன்னும் சில விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்.
எனக்கு என்னுடைய படத்தைப் பற்றி நன்றாக தெரியும். இன்னும் சில விருதுகளை பெற தகுதியான திரைப்படம் தான் ஒத்த செருப்பு.

இந்த படம் என்னுடைய தனித்துவமான படம். இருந்தும் இந்த படத்தில் என் நடிப்புக்கு எனக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது. சிறந்த நடிகருக்கான விருது கிடைக்காத நிலையில் அடுத்த படத்தில் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க முயற்சி செய்வேன். நான் இரவில் நிழல் என்ற சிங்கிள் ஷாட் படம் எடுத்து வருகிறேன். இது உலகில் இதுவரை யாரும் செய்யாத முயற்சி படம் என்று கூறியுள்ளார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement