‘மைக்கை கண்டு பிடித்தவர் Emile Berliner, மைக்கை Catch பிடிக்காமல் விட்டவர் Robo’ – ரோபோ ஷங்கருக்கு முத்தமிட்டு புகைப்படத்தை வெளியிட்ட பார்த்திபன்.

0
239
parthiban
- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற இரவின் நிழல் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் ரோபோ ஷங்கர் மீது பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்துவிட்டார் என்று பெரும் சர்ச்சை கிளம்பியது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இறுதியாக இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. .இதற்காக ஸ்பெஷல் ஜூரி பிரிவில் தேசிய விருதும், சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதோடு ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் அபிஷேக்பச்சனை வைத்து பார்த்திபன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரவின் நிழல் பாடல் வெளியீடு :

இதனைத் தொடர்ந்து தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியது.

மைக்கை எறிந்ததால் சர்ச்சை :

முதல் பாடல் வெளியீட்டின் போது ஏ ஆர் ரகுமான், பார்த்திபன் இருவரும் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்திபன் பேசிக்கொண்டிருக்கும்போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. உடனே பார்த்திபன் கோபப்பட்டு மேடை மேல் இருந்து மைக்கை தூக்கி கீழே எறிந்தார். பிறகு விழாவில் பேசும்போது பார்த்திபன் கூறியிருப்பது. பொதுவாகவே நான் மேடையில் பேசும்போது ரொம்ப பதட்டம் ஆகிவிடுவேன்.ஏனென்றால், எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது மட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் ஒரு சில்டு கொடுத்தார்.

-விளம்பரம்-

பார்த்திபன் கொடுத்த விளக்கம் :

அதை தூக்கும் போது எனக்கு கை கொஞ்சம் சுளுக்கு பிடித்துவிட்டது. என்னால் வெளியில் கத்த முடியவில்லை. அந்த சமயம் பார்த்து மைக் வேலை செய்யவில்லை. அந்த கோபத்தில் நான் மைக்கை தூக்கி போட்டு விட்டேன். நான் செய்தது அநாகரிகமான செயல் தான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும், பார்த்திபன், ரோபோ ஷங்கர் மீது தான் மைக்கை தூக்கி எறிந்தார்.

ரோபோ ஷங்கருக்கு முத்தம் :

இதனால் பார்த்திபன் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்று தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார் பார்த்திபன். இப்படி ஒரு நிலையில் ரோபோ ஷங்கருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில் கையில் மைக்கை பிடித்துகொண்டு ரோபோ ஷங்கருக்கு முத்தம் கொடுக்கும் பார்த்திபன் ‘மைக்கை கண்டு பிடித்தவர் Emile Berliner, மைக்கை Catch பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர், மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், முடிவில் முத்தமிட்டவர்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement