’98 சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடும் மனிதரிடமிருந்து’ – பார்த்திபன் பகிர்ந்த வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்.

0
354
parthiban
- Advertisement -

மணிரத்தினத்தின் பதிவிற்கு பார்த்திபன் கொடுத்திருக்கும் பதில் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி இருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்:

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். 70 ஆண்டு கால எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியிருக்கிறது.

படம் குறித்த தகவல்:

தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று சொல்லலாம். மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் இந்த படத்தை தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கில் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மணிரத்தினம் போட்ட டீவ்ட்:

இந்நிலையில் மணிரத்தினத்தை குறித்து பார்த்திபன் அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதாவது, பார்த்திபனை, மணிரத்தினம் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை தான் பார்த்திபன் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் மணிரத்தினம், உங்கள் சொந்த படப்பிடிப்பின் போது நேரம் ஒதுக்கி படத்திற்கு வந்ததற்கும், படத்திற்காக பல முயற்சிகளை மேற்கொண்டதற்கும் நன்றி.

பார்த்திபன் டீவ்ட்:

இன்று தஞ்சை சென்றதற்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். இந்த பதிவுக்கு பார்த்திபன், 2 வரிகள் பேசவே 98 சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடும் மனிதரிடமிருந்து 5.2 வரிகள் பாராட்டு- பாரே சீழ்க்கை அடிப்பது போலுள்ளது என்று பதில் அளித்து இருக்கிறார். தற்போது பார்த்திபனின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement