விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் புதுப்புது வித்தியாசமான கதைகளத்துடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது "பிட்ச் இட் ஆன்" நீங்களும் ஆகலாம் கலாம் என்ற புது நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தென்னிந்தியாவில் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களை கண்டறிவது.

அதாவது, இளம் விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றவர்கள் என யாராக இருந்தாலும் புதுமையான சிந்தனை கொண்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது தான் இந்த நிகழ்ச்சியின் உடைய நோக்கமே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எந்த வயது வரம்புமே கிடையாது. அதே போல் எந்த துறையில் வேண்டுமானாலும் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வரலாம். கண்டுபிடிப்பாளர்களின் எண்ணங்களையும் திட்டங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர ஒரு சிறந்த மேடையாக தான் இந்த நிகழ்ச்சி இருக்கிறது.
நீங்களும் ஆகலாம் கலாம் :
இந்த நிகழ்ச்சியை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி
செப்டம்பர் 7ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், சம்பாதித்தது எல்லாம் பர்ஸோடு இல்லை. காரணம் பாதித்ததெல்லாம் மனதோடு பாதிப்பை சீர் செய்யவே சம்பாதிப்பது.

பார்த்திபன் பதிவு:
பாதிப்பு என்னுடையதாகத் சுயநலத்தில் தொடங்கி, மற்றவர்களின் துயர் தீர்ப்பதாக பொதுநலமாய் நலமாய் மாறியது. அதற்காகவே அப்போதைய என் ரசிக மன்றங்களை(1989)கலைத்து ‘பார்த்திபன் மனித நேய மன்றம்’ துவங்கினேன். இதுவரை நான் சம்பாதித்ததில் பாதி சமூகப் பணிகளுக்கும் மீதி சினிமா தயாரிக்கவும் பயன்படுத்தினேன். நீங்களும் ஆகலாம் கலாம்! நிகழ்ச்சியில் கூலி வேலை செய்யும் ஒருவரின் மகன் இளம் விஞ்ஞானியாக உருவாகத் தேவையான முதலீடு 50,000 பணத்தையும், இன்னொரு மினி விஞ்ஞானிக்கு 11,500 பணத்தையும் என் தனிப்பட்ட விருப்பத்தில், என் பாக்கெட்டிலிருந்து கொடுக்க முன்வந்தேன்.
சம்பாதித்தது எல்லாம் பர்ஸோடு இல்லை.காரணம்…..
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 4, 2025
பாதித்ததெல்லாம் மனதோடு !
பாதிப்பை சீர் செய்யவே சம்பாதிப்பது.ஆனால்
பாதிப்பு என்னுடையதாகத் சுயநலத்தில் தொடங்கி, மற்றவர்களின் துயர் தீர்ப்பதாக பொதுநலமாய் நலமாய் மாறியது. அதற்காகவே அப்போதைய என் ரசிக மன்றங்களை(1989)கலைத்து ‘பார்த்திபன்… pic.twitter.com/kTtrtiasWa
பின் V C Sreveshயிடம் வங்கிக் கணக்கைக் நான் கேட்ட போது “ சார்! நிஜமாலுமே குடுக்கப் போறீங்களா?” என பரிதாபமாய் கேட்டபோது எனக்கு வருத்தமாகி விட்டது. மேடைக்காக மட்டுமே மேதமை காட்டும் உலகில் செய்த நற்செயலை வெளிச்சமிட்டு அதன் மூலம் இன்னும் பலரும் சிலருக்காவது உதவ இது உதவுமே. இதை நேரில் கண்ட ஒருவர் “அகில உலக கடவுள் உங்களுக்கு அருள் வழங்குவார். “ என கடிதம் எழுதியிருக்கிறார். அதென்ன ரசிகர் மன்றம் போல அகில உலக கடவுள்? என்று கூறி இருக்கிறார்.






