கோமாளி கதை திருட்டுக்கு பஞ்சாயத்து – பார்த்திபனை ‘லவ் டுடே’வில் பழிவாங்கிய பிரதீப் ?

0
1488
Parthiban
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குனராக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் படத்தின் தன்னை பற்றிய ஒரு வசனம் வந்தது குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் “கோமாளி” படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன்நடித்து இருந்தார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள்நடித்து இருந்தண்ட் . காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

வசூல் சாதனை :

கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 100 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படியொரு நிலையில் லவ் டுடே படத்தில் பல நடிகர்களின் வசனங்கள் வந்திருந்தாலும் நடிகர் பார்த்திபனை பற்றி “பக்காவா பேசிகிட்டு இருந்த நீ.. பார்த்திபன் மாறி பேச ஆரம்பிச்சுட்டாயே” என்று ஒரு டயலாக் வரும். இந்த நிலையில் தான் இந்த டயலாக் குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் ஒரு பேட்டியில் பேசியிருகிறார்.

பார்த்திபன் கூறியது :

அதாவது பிரதீப் ரங்கநாதன் இயக்கிய “லாவ் டுடே” படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன். நான் அந்த வசனத்தை பார்த்ததும் முதலில் வாய்விட்டு சிறிது விட்டேன். ஆனால் பின்னர் தான் தெரிந்தது அது என்னை கலாய்க்க வைத்த வசனம் என்று கூறினார் பார்த்திபன். மேலும் தன்னிடன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உதவி இயக்குனரான பணியாற்றி வந்தாராம், அதோடு அவர் ஒரு கதையையும் தயார் செய்து வைத்திருந்தாராம்.

-விளம்பரம்-

மறைமுகமாக தாக்கிய பிரதீப் :

ஏனென்னில் அந்த கதையையும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிகர் ஜெயம் ரவி நடித்த “கோமாளி” திரைப்படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருந்ததினால் இயக்குனர் பாக்யராஜ் முன்னிலையில் இந்த சர்ச்சை குறித்து பார்த்திபன் பேசி தன்னுடை உதவி இயக்குனருக்கு 10 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தாராம். இந்நிலையில் இந்த விஷியத்தை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் “லவ் டுடே” படத்தில் அப்படி ஒரு வசனத்தை வைத்துள்ளார்.

அந்த டயலாக் அர்த்தம் :

அந்த டயலாக் “நன்றாக இருந்த ஒருவன் பைத்தியமாக மாறியதாக” அர்த்தத்தை அந்த இடத்தில் குறித்தது. தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் “லவ் டுடே” படத்தில் அந்த டயலாக்கை வைத்திருந்தாலும். அவரை பாராட்டிதான் அந்த பேட்டியில் பேசினார் இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன். இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான கதைகளை இயக்குவதில் வல்லவர். அவர் சமீபத்தில் நடித்து இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

Advertisement