இதுக்கே 3.5 கோடி செலவு செய்யணும். ஆஸ்கார் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன பார்த்திபன்.

0
34128
parthiban
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் வித்தியாசமான முறையில் கதைகளை கொடுப்பதில் திறமை வாய்ந்தவர் நடிகர் பார்த்திபன். இது மட்டும் இல்லைங்க இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையும் உருவாக்கியவர். இவர் சினிமா உலகில் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணிபுரிந்து இருக்கிறார். தற்போது தன்னுடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக “ஒத்த செருப்பு சைஸ் 7” என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும், ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும் பணியாற் இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருந்தார். இந்த படம் திரில்லிங், திகில், காமெடி கலந்த கலவையாகஉருவானது. மேலும், ஒரு சாதாரண நடுத்தர மனிதனின் எதார்த்தமான வாழ்க்கையை காட்டும் படமாக இருந்த “ஒத்த செருப்பு அளவு7” படம் இதுவரை யாரும் காணாத ஒரு படமாக அமைத்திருந்தது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

சமீபத்தில் இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.பலரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், சமீபத்தில் ஆஸ்கார் விருதுகளை வென்ற படங்கள் மற்றும் நடிகர் நடிகைகள், கலைஞர்களின் பட்டியலை ஆஸ்கார் அமைப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால்,ஒத்த செருப்பு படம் எந்த பட்டியலிலும் இடம்பெறவில்லை. இந்த நிலையில் பார்த்திபனிடம் இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், அடுத்த வருடம் கண்டிப்பாக ஆஸ்காரில் உங்கள் படம் இடம் பெரும் என்று ஒரு ரசிகர் கூறியதற்கு, இருந்தால் மகிழ்ச்சி இல்லையேல் அடுத்ததில் முயல்வேன்.உள்ளூரிலேயே இவ்வளவு அது வெளிநாட ஆயிரம் இருக்கும், அதற்கு செலவு
செய்யவும் என்னால் இயலவில்லை பாப்போம் என்று கூறியுள்ளார் பார்த்திபன். இந்த டீவீட்டை கண்ட ரசிகர் ஒருவர் ஆஸ்காருக்கு செலவு செய்யணுமா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த பார்த்திபன், விசாரிச்சு பாருங்க விசாரனைக்கே 3 1/2 கோடி செலவு செஞ்சாங்க. அப்படி பிரச்சாரம் பண்ணாதான் நாமினேஷனாவது கிடைக்கும்.

-விளம்பரம்-
Advertisement