ஆடியோ லான்ச்ல அஜித் பத்தி அப்படி பேசிட்டு, படத்துல கேலி செய்றீங்க – கடுப்பான அஜித் ரசிகர்கள். காரணம் இந்த காட்சி தான்.

0
159162
Vijay

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு பின்னர் இரு துருவங்களாக இருந்து வருவது விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதேபோல துறை ரீதியாக இவர்கள் இருவருக்கும் பல போட்டிகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விஜய் மற்றும் அஜீத் இருவருமே நல்ல உறவில் தான் இருந்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட ‘நண்பர் அஜித்தைப் போல போலாம்’ என்று விஜய் கூறியது அஜித் ரசிகர்களை கவர்ந்து இருந்தது.

என்னதான் விஜய் பற்றி அஜித்தும், அஜித் பற்றி விஜய்யும் பெருமையாக பேசி வந்தாலும். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்களும், பாடல்களும் விஜய், அஜித் படங்களில் இருந்து வந்தது. இதனாலேயே இவர்களது ரசிகர்கள் பல முறை கருத்து மோதல்களில் கூட ஈடுபட்டு கொண்டு தான் இருக்கின்றனர். அதே போல அஜித்தை தாக்கி விஜய் ரசிகர்களும் விஜய்யை தாக்கி அஜித் ரசிகர்களும் அடிக்கடி சமூக வலைதளத்தில் சண்டையிட்டு கொள்வதும் வாடிக்கையான விஷயம் தான்.

- Advertisement -

அதே போல பல முறை விஜய் மற்றும் அஜித் பற்றிய மோசமான ஹேஷ் டேக்குகள் கூட ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தின் காட்சி ஒன்றில் அஜித் பற்றி இடம்பெற்ற போஸ்டர் ஒன்று தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களால் பெரிதும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், மாஸ்டர் மகேந்திரன், சாந்தனு போன்ற பலர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் சண்டை காட்சி ஒன்றில் அஜித் பற்றி இருக்கும் போஸ்டர் தான் தற்போது விஜய் – அஜித் ரசிகர்கள் மத்தியில் பணிப்போரை தூண்டியுள்ளது. மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் பக்கட்டை எடுத்துக்கொண்டு விஜய் சேதுபதிக்கு சொந்தமான கடைகளை எல்லாம் தேடி சென்று அடித்து நொறுக்குவார். அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு சொந்தமான ஒயின் ஷாப் ஒன்றில் சென்று அடித்து நொறுக்குவார்.

-விளம்பரம்-

அந்த காட்சியில் விஜய்க்கு பின்னால் இருக்கும் பத்திரிகை விளம்பர போஸ்டர் ஒன்றில் ” என்று குறிப்பிடபட்டிருக்கும். இதனை சுட்டிக்காட்டி தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் பணிப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். அஜித் பற்றிய இந்த போஸ்டர் எதிர்ச்சியாக வைக்கப்பட்டதா இல்லை அஜித் ரசிகர்களை கவர இந்த போஸ்டர் வைக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் இப்படி ஒரு செய்தி உண்மையில் 2017 ஆம் ஆண்டு பத்திரிகையில் வெளியான செய்து என்று சிலர் கூறி வருகின்றனர்.

Advertisement