தன்னை அறிமுகப்படுத்தியவிரிடமே நித்யானந்தாவின் புத்தகத்தை கட்டியுள்ள ரஞ்சிதா. அதற்கு அவர் பதில்.

0
61867
Ranjitha

போலி சாமியார் நித்தியானந்தா பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய நாயகன். இந்து மத போதனைகளை போதிப்பதாக கூறி இந்து பாலியல் புகார்களில் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா. இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் இல்லாமல் உலகில் பல நாடுகளில் இவருடைய ஆசிரமங்கள் உள்ளன. உலக அளவில் இவருக்கு பக்தர்கள் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து வருகின்றன.

Nithyananda ranjitha

- Advertisement -

குழந்தைகள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய வந்த குழந்தைகளை பாலியல் கொடுமைப் படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்து வருகின்றன. மேலும், மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க நித்தியானந்தா என்றாலே நமக்கு நினைவில் வருவது நடிகை ரஞ்சிதா தான். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ரஞ்சிதாவுடனான நித்யானந்தா படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : 39 வயதிலும் கிளாமரில் தூக்கல் காட்டும் கிரண். அள்ளி அள்ளி கொடுத்த செல்பி புகைப்படங்கள்.

தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரஞ்சிதா. ஜெய்ஹிந்த் படத்தில் அர்ஜுடன் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ரஞ்சிதா. இதன் பின் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ரஞ்சிதா. தற்போது ரஞ்சிதா சாமியார் ஆகிவிட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் போலி சாமியார் நித்தியானந்தா உடன் ரஞ்சிதா இருந்த படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார் ரஞ்சிதா. இந்த வீடியோ மூலம் சினிமாவில் அவர் வாங்கி வைத்த மொத்த பெயர், புகழ் எல்லாமே டேமேஜ் ஆனது. அதன் பின்னர் வேறு வழியின்றி அந்த ஆசிரமர்த்திலேயே செட்டில் ஆனார்.

-விளம்பரம்-
Image result for paruchuri gopalakrishna

நித்தியானந்தாவின் அத்தனை ஆசிரமங்களுக்கும் நடிகை ரஞ்சிதா தான் ராஜமாதா. ரஞ்சிதா டன் கணக்கில் தங்க நகைகளை வைத்து உள்ளார். ரஞ்சிதா அசைவின்றி எந்த வேலையும் அங்கு நடக்காது. முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டும் என்றாலும் ரஞ்சிதா தான் தீர்மானம் சொல்லுவார் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல எழுத்தாளரும், வசனகர்த்தாவான பரிச்சூரி கோபாலகிருஷ்ணா அவர்கள் ரஞ்சிதா குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

தெலுங்கு புரிஞ்சா மட்டும் பாருங்க

அதில் அவர் கூறியது, எனது மகளும், ரஞ்சிதாவும் நெருங்கிய தோழிகள். ரஞ்சிதாவிடம் நிறைய திறமைகள் இருப்பதை அறிந்து தான் நான் அவரைக் கடப்பா ரெட்டம்மா என்ற படத்தில் நடிக்க வைத்தேன். பின்னர் ஒரு முறை ரஞ்சிதா என்னை சந்திக்க என் வீட்டிற்கு வந்து இருந்தார். அப்போது ரஞ்சிதா நித்யானந்தா புத்தகத்தை என்னிடம் கொடுத்து இதைப் பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டார். நான் அப்போது அமைதியாக எதுவும் கூறாமல் இருந்து விட்டேன். ஒருவேளை அப்போது ரஞ்சிதாவுக்கு அறிவுரை கூறி எச்சரிக்கை படுத்திருந்தாள் இப்போது இந்த நிலைமை ரஞ்சிதாவுக்கு ஏற்பட்டு இருக்காது என்று நினைத்து பல முறை நான் வந்திருக்கிறேன். அவருக்கு இருக்கும் திறமைக்கு சினிமாவில் அவர் இன்னும் சிறந்த இடத்தை பிடித்து இருக்கலாம். ஆனால், அவர் தனது எதிர்காலத்தை இழந்து விட்டார். மேலும், அவரிடம் இருந்த நல்ல விஷயங்களை மக்களும் மறந்து விட்டார்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement