உண்மையில் நடிகர் சரவணனுக்கு பன்றி காய்ச்சலா..!பேட்டி கொடுத்த சரவணன்..!

0
158
saravanan

பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரவணன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

paruthiveeran

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சிகள் பரவலாக பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பல்வேறு நபர்கள் உயிரிந்துள்ளனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே சேலத்தை சேர்ந்த நடிகர் சரவணன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் தனக்கு பன்றி காய்ச்சல் இல்லை என்று நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை அன்று எனக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அது சாதாரண காய்ச்சல் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள். வீட்டுக்கு வந்த பின் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் ஒரு படத்தில் நடித்தும் விட்டேன்..இன்னமும் பல பேர் எனக்கு பன்றி காய்ச்சல் இருக்கிறது என்று போன் செய்து நலன் விசாரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.