கற்பழிப்புகளுக்கு பெண்கள் தான் காரணம். அடாவடியாக பேசிய ஆணின் ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்ட பார்வதி.

0
1755
paarvathi
- Advertisement -

சமீப காலமாகவே நாட்டில் கற்பழிப்பு சம்பவம் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே ஒரு பெண்ணை எல்லா விதத்திலும் குற்றம் சாட்டுவது தான் நம் நடைமுறையில் வழக்கமாக உள்ளது. அதிலும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார் கூட அதற்கு அந்த பெண் தான் காரணம் என்று கூறுவார்கள். ஒரு பெண்ணின் ஆடை, அவரின் நடத்தினால் தான் இது நடந்தது என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமை குறித்து பிரபல நடிகை பார்வதி மேனன் அவர்கள் சோசியல் மீடியாவில் கருத்து பதிவிட்டு உள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பார்வதி மேனன்.

-விளம்பரம்-

இவர் பூ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் மரியான், பெங்களூர் நாட்கள், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை பார்வதி மேனன் அவர்கள் சோசியல் மீடியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய கூடாது என்று ஆண், பெண்களுக்கு பயிற்று விக்கும் விதமாக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி உள்ளார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவன் பலாத்காரத்துக்கு அந்தப் பெண்ணினுடைய செயல்கள் தான் காரணம் என்று டீவ்ட் போட்டுள்ளார். பின் அந்த நபர் உடனே இன்னொரு டீவ்ட் போட்டுள்ளார். அதில் அவர் ஒரு பெண் ஒழுங்காக நடந்து கொண்டால் இந்த மாதிரி கற்பழிப்பு நடக்காது. முதலில் நீங்கள் ரேப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இதை பார்த்த பார்வதி மேனன் அவர்கள் பாலியல் கொடுமைகளை பெண் குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்பதைப் போல ஆண் குழந்தைகளுக்கும் சொல்லி வளர்க்க வேண்டும். ஆண், பெண் இருபாலரையும் சிறுவயதில் இருந்தே சரியான முறையில் வளர்க்க வேண்டும். இது பெற்றோர்களின் வளர்ப்பினால் தான் நடக்கும் என்று கூறினார். இப்படி இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி பதிவிட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது

-விளம்பரம்-
Advertisement