வீட்டு வேலைக்காரர் மீது அடுக்கடுக்காக குற்றசாட்டு சாட்டிய பார்வதி நாயர் – அவர் சொன்ன ஷாக்கிங் காரணம்.

0
206
- Advertisement -

வீட்டு வேலைக்காரர் சுபாஷ் சந்திர போஸ் மீது பார்வதி நாயர் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் பார்வதி நாயர். இவர் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். கௌதம் வாசுதேவ் உருவாகி இருந்த இந்த படத்தில் அஜித், அருண்விஜய், த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி, விவேக் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் பார்வதி நாயர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக பெற்று இருந்தார். என்னை அறிந்தால் படத்திற்கு முன்பாகவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பார்வதி நாயர். இருந்தாலும், இவர் பிரபலமானது என்னவோ என்னை அறிந்தால் படத்தில் தான். அதன் பின் இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பார்வதி நாயர் திரைப்பயணம்:

பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த வெப் சீரிஸிலும் பார்வதி நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் பாரி கே விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ், முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி சந்துரு தயாரிக்கிறார்.

பார்வதி நாயர் வீட்டில் திருட்டு:

இதனை அடுத்து பார்வதி அவர்கள் ரூபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் திருட்டு போன சம்பவம் ஏற்கனவே சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை பார்வதி அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்த சுபாஷ் என்பவர் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரம், லேப்டாப், செல்போன் போன்ற பொருட்களை திருடி சென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

சுபாஷ் அளித்த புகார்:

இந்த சம்பவம் அறிந்த நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அதன் பின் அவரை தேடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதனை அடுத்து சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர், நான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்து வந்தேன். என்னை பார்வதி அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். என் மீது அபாண்டமாக திருட்டு பட்டம் சுமத்தி இருக்கிறார் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து பார்வதி நாயர் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, என்னோட அனைத்து போட்டோக்களையும் எனது அனுமதி இல்லாமல் சுபாஷ் எடுத்திருக்கிறார்.

சுபாஷ் குறித்து பார்வதி நாயர் அளித்த பேட்டி:

அவர் ஒரு சைக்கோ. அவருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள். அவர் என்னோட வீட்டு வேலைக்காரர் மட்டும்தான். உறவினர் கிடையாது. என்னோட அப்பா, அம்மா துபாயில் இருக்கிறார்கள். நான் அங்க தான் வளர்ந்தேன். என்னுடைய அண்ணன் சென்னையில் இருந்தார். இப்போது மும்பையில் ஷிப்ட் ஆகிவிட்டார். வேறு யாரும் வீட்டில் கிடையாது. ஆண் நண்பர்கள் வந்தார்கள் என்று சொல்வதெல்லாம் இந்த வழக்கை திசை திருப்பதான். அவர் தப்பு பண்ணி இருக்காரு. அவர் பெரிய குற்றவாளி. அவருக்கு பின்னாடி யாரோ இருந்து கொண்டு அவரை இயக்குகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இவர் ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்தால் இந்த அளவுக்கு அவரால் பிரச்சனை செய்ய முடியாது. அவரை ஏற்கனவே வேலையை விட்டு நீக்கினேன். அதற்குப்பின் அவர் மன்னிப்பு கேட்டு கெஞ்சினார். பின்னர் மன்னித்து மீண்டும் வேலைக்கு சேர்த்தேன். அதுதான் நான் பண்ணிய தப்பு என்று கூறியிருக்கிறார்.

Advertisement