கசமுசா காட்சிகளால் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்துள்ள அஜித் பட நடிகை.

0
2280
parvathy
- Advertisement -

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் தேவர்கொண்ட நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் இந்த படம் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் பாலா ‘வர்மா’ என்ற பெயரில் ரீ-மேக் செய்ய விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை அனைத்தும் வெளியான நிலையில் இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், படத்தின் இறுதி ரிசல்ட் திருத்திகாரமாக இல்லை என்றும் படத்தில் சில மாற்றங்களை செய்ய பாலா மறுத்துவிட்டார் அதனால் படத்தை வெளியிடபோவது இல்லை என்று இ4 நிறுவனம் அறிவித்தது. இதை தொடர்ந்து இந்த படத்தை கிரிசாயா ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார்.

இதையும் பாருங்க : அட, சார்பட்டா ‘டாடி’ திமுகவின் இந்த முக்கிய பிரபலத்தின் மருமகன் தானா.

- Advertisement -

இதே திரைப்படம் இந்தியிலும் ரீ – மேக் செய்யப்பட்டது. அர்ஜுன் ரெட்டி படத்தின் அணைத்து வெர்ஷன்களிலும் கவர்ச்சியான காட்சிகளும் முத்தக்காட்சிகளும் நிரம்பி வழிந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிக்க மறுத்த காரணத்தை கூறியுள்ளார் நடிகை பார்வதி நாயர். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் மனைவியாக நடித்தவர் நடிகை பார்வதி நாயர்.

உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தார் அப்போது ஒரு ரசிகர், அர்ஜுன் ரெட்டி படத்தில் நெருக்கமான காட்சி இருந்ததால் தான் நடிக்க மறந்துட்டுவிடீர்களா என்று கேட்டிருந்தார். அதற்கு, ஆம் உண்மை தான் அப்படி ஒரு அழகான படத்தை நான் மிஸ் செய்து இருக்கக்கூடாது என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement