வயச வச்சி கமண்ட் பண்றவங்களுக்கு இதான் பதில் – 4 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்த கிஷோர் – பிரீத்தியின் முதல் பேட்டி.

0
837
kishore
- Advertisement -

2009ல் வெளியான “பசங்க” திரைப்படம் அப்போது பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதோடு நடிகர் விமலும் இந்த படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகினார். பசங்க திரைபடம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் அதிகமாக குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகள் கருத்து வேறுபாடுகள் போன்றவை காட்டப்படும். இப்படம் அப்போது பெரும் வெற்றியடைந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு பசங்க 2 எடுக்கப்பட்டது ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை படக்குழுவிற்கு கொடுக்கவில்லை.இந்த நிலையில் பசங்க 1 படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் கிஷோர் மற்றும் மற்றொரு கதைக்கு முக்கிய கதாபாத்திரமான ஜீவா நித்தியானந்தம் கதோத்திரத்தில் ஸ்ரீ ராமும் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் வேறு சில படங்களிலும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

நடிகை ப்ரீத்தி :

மேலும் இப்படம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு தான் இப்படத்தில் நடித்திருந்த கிஷோருக்கு தமிழ்நாடு அரசின் விருது மற்றும் தேசிய விருது வழங்கப்பட்டது.இந்த நிலையில் நடிகர் கிஷோர் சீரியல் நடிகை நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். நடிகை ப்ரீத்தி குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ஆபீஸ்” என்ற சீரியலின் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமாகியவர்.

பின்னாளில் `லட்சிமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தன்னுடைய காதலி ப்ரீத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார் கிஷோர்.

-விளம்பரம்-

வயது வித்தியாசம் பற்றி கிஷோர் :

இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கிஷோரை விட ப்ரீத்தி 4 வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு இவர்களிடம் செய்தி ஊடகம் ஓன்று வயது வித்தியாசம் குறித்து கேட்டிருந்தது. அதற்கு பதிலளித்த கிஷோர் கூறியதாவது “எனக்கு கிடைத்து போன்று ஒரு பெண் ஒருவருக்கு கிடைத்திருந்தால் அந்த கேள்வியை அவர் கேட்க மாட்டார். அவரவர்களுக்கு ஏற்பட்டால் தான் தெரியும். எங்கள் இருவருக்கு பிடித்து விட்டது.

அந்த சூழ்நிலை வந்தால் தான் தெரியும் :

எங்களுடைய வீட்டிலும் எந்த பிரசனையும் இல்லை அவர்களது வீட்டிலும் எந்த பிரச்னையும் இல்லை எனவே திருமணம் செய்து கொண்டோம்.மேலும் ஒரு பெரிய பெண்ணை காதலிக்கின்றனர் என்றால் அவர்களுக்கு இந்த விஷயம் பெரிதாக தெரியாது என்றார். இதனையடுத்து பேசிய ப்ரீத்தி இவை வெறும் எண்கள் தான், சந்தோசமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இந்நிலையில் இவர்களது இந்த பேட்டி வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் இந்த புது மண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement