தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பைசன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.

கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் பைசன் படத்தினுடைய வெற்றி விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் பட குழுவினர் கலந்துகொண்டு நன்றியை தெரிவித்து இருக்கிறார்கள்.
பைசன் பட விழா:
பின் விழாவில் பேசிய பசுபதி, இந்த படத்தை இன்று ஒரு பெரிய வெற்றி படமாக மாற்றியதில் மிகப்பெரிய பங்கு ஊடக நண்பர்களுக்கு தான் இருக்கிறது. ரஞ்சித்துடன் இது எனக்கு மூன்றாவது படம். எனக்கும் ரஞ்சித்துக்கும் இடையே ஒரு அன்பும் உறவும் இருக்கிறது. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் வந்த பிறகுதான் திரைப்படங்கள் உடைய பார்வையே மாறி இருக்கிறது. அதற்காக என்னுடைய நன்றிகள். மாரி செல்வராஜ் அதீதமான கலகக்காரன்.

பசுபதி பேட்டி:
படப்பிடிப்பு தளத்தில் அவருடைய வேகமும் ஆற்றலும் சுறுசுறுப்பும் நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். எங்களுடைய நடிப்பை பாராட்டுவதற்கு முக்கிய காரணம் மாரி செல்வராஜ் தான். இவருடைய நடிப்பை பார்த்து அல்ல, அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு நடிப்பது தான் எதார்த்தமாக வந்திருக்கிறது. அதற்கு மாரி செல்வராஜிக்கு ரொம்ப நன்றி. விக்ரம்- துருவ் இருவருடனும் நடித்திருப்பது தொடர்பாக என்னிடம் நிறைய கேள்வி கேட்டார்கள். இருவரையும் ஒப்பிடுவது ரொம்ப தவறு.
https://www.youtube.com/watch?v=td0uSJB695E&t=2679s
படம் பற்றி சொன்னது:
விக்ரமுடைய அனுபவம், வாழ்க்கை முறை வித்தியாசமானது. துருவுடைய வாழ்க்கை இப்போது தான் தொடங்குகிறது. துருவுடைய முதுகில் பெரும் பாரத்தை இறக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். அவருக்கு கிடைக்க வேண்டிய அனுபவம் கண்டிப்பாக கிடைக்கும். அமீர் கூட என் நான் தனிப்பட்ட ரீதியில் கூட தொடர்பு கொண்டது கிடையாது. பருத்திவீரன் படத்தில் என்னை நடிக்க அழைத்தார். அப்போது தான் வெயில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டு மாதம் கால்ஷீட் கேட்டார்கள். அதனால் கொடுக்க முடியவில்லை. இந்த செய்தி அமீர் சாருக்கு கிடைத்ததா? என்றும் தெரியாது. ஆனால், இதுதான் உண்மை. எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.






