‘நான் தண்ணீர் குழந்தை’ நீச்சல் குள புகைப்படங்களை பகிர்ந்த பட்டாஸ் பட நடிகை.

0
12486
mehreen pirzada

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பட்டாஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தனுஷ், சினேகா,நாசர், இளவரசு, மனோ பாலா என்று ரசிங்கர்களுக்கு பரிட்சயமான பலர் நடித்த இந்த படத்தில் இந்த படத்தில் தனுஷ் அவர்கள் ஒரு திருடனாகவும், வீர கலைஞராகவும் இரண்டு வேடத்தில் நடித்து உள்ளார். அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து உள்ளார். புதுப்பேட்டை படத்துக்கு பின் 13 ஆண்டுகள் கழித்து தனுஷ் – சினேகா ஜோடி இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

View this post on Instagram

I’m a water baby ?? #vacay

A post shared by MEHREEN ✨? (@mehreenpirzadaa) on

மேலும், இந்த படத்தில் தமிழகர்களின் மறக்கப்பட்ட தற்காப்பு கலையான அடிமுறை என்ற தற்காப்பு கலை குறித்து கூறி இருந்தனர். இந்த படத்தில் அப்பா தனுஷ் ஜோடியாக ஸ்னேகாவும் மகன் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் ஜோடியாக மெஹ்ரின் பிர்சடா என்பவர் நடித்திருந்தார். இவர் தமிழுக்கு ஒன்றும் புது முகம் கிடையாது. இவர் ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இந்த இளம் நடிகை ஆரம்பத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.அதன் பின்னர் தெலுங்கில் 2016 ஆம் வெளியான Krishna Gaadi Veera Prema Gaadha என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ 2017 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தின் மூலம் தான்.

View this post on Instagram

#srilanka #travelgram ?

A post shared by MEHREEN ✨? (@mehreenpirzadaa) on

அந்த படத்திற்கு பின் நோட்டா படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இந்த இரண்டு படங்களை விட ‘பட்டாஸ்’ திரைப்படம் தான் இவருக்கு தமிழில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. பட்டாஸ் படத்தில் கொஞ்சம் கவர்ச்சிக்கு அடக்கம் காட்டிய அம்மணி மாடல் அழகி என்பதால் நிஜத்தில் படு கவர்ச்சியாக இருந்து வருகிறார். அந்த வகையில் நீச்சல் குளத்தில் இருக்கும் சில கவர்ச்சியான புகைப்படங்களை தனது பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement