தன்னுடைய திருமணம் குறித்து மனம் திறந்து பாவனி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர்கள் பாவனி- அமீர். பாவனி அவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். இருந்தும் அவரை இறுதி சுற்று வரை ரசிகர்கள் அனுப்பி வைத்து இருந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:
அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர், பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
அமீர் – பாவனி காதல்:
ஒரு வழியாக எப்படியோ அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. இருவரும் அஜித்தின் துணிவு படத்தில் கூட நடித்து இருந்தார்கள். தற்போது இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையில் காதலர் தினத்தில் அமீர் – பாவனி, ஏப்ரல் 20-ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தார்கள்.

பாவனி பேட்டி:
மேலும், ஏப்ரல் 19ஆம் தேதி இவர்களுடைய ஹெல்தி கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. திருமணம் முடிந்த அன்றே மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து பாவனி அளித்த பேட்டியில், அமீர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். நான் இந்து மதத்தை சேர்ந்தவர். இருந்தாலும் எங்களுடைய திருமணம் மதம் சார்ந்து நடைபெறவில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவோம். நான் வீட்டில் எல்லா பூஜைகளையும் செய்வேன். அதேசமயம் அவர் நமாசும் செய்வார்.

திருமணம் பற்றி சொன்னது:
ரமலான் பண்டிகை சமயத்தில் அவருக்கு நான் உதவியாக இருப்பேன். அவருடைய பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் நாங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடுவோம். அதனால் திருமணத்திற்காக எங்களில் யாரும் மதம் மாறத் தேவையில்லை என்று நாங்கள் இருக்கிறோம். நாங்கள் இருவருமே எங்களுடைய நம்பிக்கையை மதிக்கிறோம். காதல் மத எல்லைகளை எல்லாம் கடந்தது. நண்பன் என்பதை தாண்டி அமீரை எனக்கு நல்ல மனிதராக இருக்கிறார். நான் அனைத்து விஷயங்களும் அவரிடம் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு போர் அடித்தாலும் நான் சொல்வதை அவர் கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் என்னுடைய எண்ணத்தை முழுமையாக புரிந்து கொண்டவர். நான் நானாக இருப்பதற்கு அவர் சுதந்திரத்தை கொடுக்கிறார். நான் என்னுடைய தந்தையிடம் மிஸ் செய்த அனைத்து அன்பையும் அமீர் எனக்கு கொடுத்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.






