விபத்தில் இறந்த நடிகை, உயிர்தப்பிய காதலன் எடுத்த விபரீத முடிவு – உண்மையான காதல்னா இதானோ.

0
330
- Advertisement -

தெலுங்கு சீரியல் நடிகை ஒருவர் விபத்தில் இறந்ததை தொடர்ந்து அவருடைய காதலன் எடுத்திருக்கும் அதிர்ச்சி முடிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சின்னத்திரை சீரியலில் மக்கள் பிரபலமாகி இருந்தவர் நடிகை பவித்ரா ஜெயராம். இவர் தெலுங்கில் Jokali, Ninne Pelladatha, Tilottama போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் சுடுகாட்டில் தான் தங்கி இருந்தோம். பசும்பொன் கதையை நான் தான் பாரதிராஜாவிடம் சொன்னேன்.

-விளம்பரம்-

மேலும், இவருடன் நடிகர் சந்திரகாந்த் சேர்ந்து பல தொடர்களில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். பின்னர் இவர்களின் நட்பு காதலானது. அதோடு இந்த ஆண்டிலேயே இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இதனால் திருமண செய்தியையும் கூடிய விரைவில் அறிவிப்போம் என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

- Advertisement -

பவித்ரா- சந்திரகாந்த் காதல்:

இப்படி இருக்கும் நிலையில் பவித்ரா- சந்திரகாந்த் இருவருமே கடந்த வாரம் பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக தெலுங்கானா மாநிலத்தின் மகபூப்நகர் அருகே இவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி இருந்தது. இந்த விபத்தில் பவித்ரா அநியாயமாக உயிர் இழந்தார். சந்திரகாந்த் படுகாயம் அடைந்தார். பவித்ராவின் இறப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் சந்திரகாந்துக்கு பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

மனவேதனையில் சந்திரகாந்த்:

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பவித்ரா இறப்பிற்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். மேலும் சந்திரகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உன்னுடன் நான் எடுத்த கடைசிப் படம் இதுதான். இப்படி நீ என்னை தனியே தவிக்க விட்டுச் சென்றதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கண்ணீரைத் துடிக்க தயவு செய்து திரும்பி வா பவி என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சந்திரகாந்த் பதிவு:

பின் தொடர்ந்து இவர் சோகமான பதிவு போட்டு இருந்தார். இந்த நிலையில் மே 18-ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் அவருடைய வீட்டில் சந்திரகாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கிறார். இவரின் இறப்பு அவருடைய குடும்பத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அடுத்து அவருடைய குடும்பத்தினர், பவித்ரா உடைய இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் சந்திரகாந்த் சில நாட்களாகவே வேதனையில் இருந்தார்.

சந்திரகாந்த் இறப்பு:

இவர் கூடிய விரைவில் சரியாகி விடுவார் என்று நினைத்தோம். ஆனால், இந்த சம்பவம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இப்படி காதலி இறந்த சில நாட்களிலேயே சந்திரகாந்த் அநியாயமாக இறந்தது தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement