ரூ.1500 கோடியை அபகரிக்க முயற்சி, சொகுசு வாழ்க்கைக்கு ஆசை – பவித்ரா லோகேஷ் குறித்து முதல் கணவர் பரபரப்பு தகவல்

0
963
pavithra
- Advertisement -

சமீபத்தில் பிரபல கன்னட நடிகையான பவித்ரா மற்றும் நடிகர் நரேஷ் பாபு புத்தாண்டின் போது முத்தமிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த பதிவு வைரலாகி பல விமர்சங்ககளை பெற்றது. மேலும் நடிகை பவித்ராவின் மீது நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா குற்றம் சாட்டி வந்த நிலையில் பவித்ரா குறித்த அதிர்ச்சி தகவைலை ரம்யா சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் பவித்ராவின் முதல் கணவர் இந்த விஷயம் பற்றி பேசியோருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகை பவித்ரா :

கன்னட சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை பாவித்ரா தமிழ் சினிமாவில் வெளியாகிய கெளரவம், அயோக்கியா, வீட்டுல விஷேசம், பெ ரண்சிங்கம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதோடு பல சீரியல்களில் கதாயனாகிகளுக்கு அம்மாவாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். மேலும் இவர் ஏற்கனனே இரண்டு திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து கொண்டார். இந்த இலையில் இவரும் நடிகர் நரேஷும் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்று சோசியல் மீடியாவில் கிசு கிசுக்கள் பரவின.

- Advertisement -

நரேஷ் மூன்றாவது மனைவி :

இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் மைசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் அங்குசென்ற மூன்றவது மனைவி ரம்யா நடிகர் நரேஷ் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி கதியுள்ளார், அதனால் அங்கி போலீஸ் வந்ததை அடுத்து ரம்யா நடிகர் நரேஷுசை செருப்பால் அடிக்க சென்றுள்ளார் அப்போது அவரை போலீசார் தடுத்தனர். இதனையடுத்து ரமேஷ் ரம்யாவை பார்த்து விசில் அடித்துக்கொண்டே கிண்டலடித்தபடி சென்றார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் சமீபத்தில் புத்தாண்டின் போது நரேஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் இவரும் நடிகை பவித்ராவும் முத்தம் கொடுத்து திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியிருந்தார். சொன்னது போன்றே திருமணம் செய்து கொண்டு தேனிலவிற்காக நரேஷ் மற்றும் பவித்ரா துபாய் சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் நடிகை பவித்ராவின் முதல் கணவர் சுரேஷ் பிரசாத் முதன் முதலாக இந்த பிரச்சனை பற்றி பேசியிருக்கிறார்.

-விளம்பரம்-

முதல் கணவர் கூறியது :

அவர் கூறியதாவது “பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர் அதற்காகத்தான் என்னை அவர் பிரிந்தார். அவர் ஒரு சந்தர்ப்ப வாதி. நரேஷ் விஷியத்தில் வித்தியாசமான திட்டம் தீட்டியிருக்கிறார். நரேஷின் 1500கோடி ரூபாயை சுரண்டுவதற்காகத்தான் இந்த பொய் நாடக திருமணம். பணத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் தான் பவித்ரா லோகேஷ் என்னை விவாகரத்து செய்தார். நரேஷுக்கு அது இன்னமும் புரியவில்லை. ஆனால் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வார் என்று கூறினார்.

Advertisement