பிக் பாஸ் அமீர்- பாவனியின் திருமண குறித்து பாவனி அம்மா மற்றும் சகோதரி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர்கள் பாவனி- அமீர். பாவனி அவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். இருந்தும் அவரை இறுதி சுற்று வரை ரசிகர்கள் அனுப்பி வைத்து இருந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:
அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர், பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ஒரு வழியாக எப்படியோ அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. இருவரும் அஜித்தின் துணிவு படத்தில் கூட நடித்து இருந்தார்கள்.

அமீர் – பாவனி காதல்:
தற்போது இருவரும் கூட கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். மேலும், நேற்று அமீர்-பாவனியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இதில் பிரியங்கா தன்னுடைய கணவருடன் கலந்துகொண்டு நாத்தனார் முறையில் இருந்து நடத்தி வைத்திருந்தார். இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

பாவனி அம்மா சொன்னது:
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அமீர்-பாவனி திருமணம் பற்றி பாவனியின் அம்மா கூறி இருப்பது, அமீர் ரொம்ப நல்ல பையன். அவனை பாவனி திருமணம் செய்து கொண்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அமீர் எனக்கும் ரொம்ப மரியாதை கொடுக்கிறான். என்னை அம்மா என்று தான் அழைப்பான். அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவன் நன்றாக வாழ வேண்டும் என்று கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து பாவனியின் சகோதரி, எல்லோரையும் விட நாங்கள்தான் இந்த நாளுக்காக ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தோம்.
https://www.youtube.com/watch?v=uxNAq7Bc9Kg
பாவனி சகோதரி சொன்னது:
பாவனி கஷ்டப்படுவதை நாங்கள் கண்கூட பார்த்திருக்கிறோம். அவளுடைய எல்லா கஷ்ட நஷ்டங்களிலும் அமீர், பாவனியை நன்றாக பார்த்துக் கொண்டார். அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. பாவனிக்கு அமீர் கிடைத்தது அவனுக்கு ஆசீர்வாதம். அவர் எனக்கு ஒரு தம்பியாகிவிட்டார். அமீருக்கு பொறுமை ரொம்ப ரொம்ப அதிகம். பாவனிக்கு ஏதாவது ஒரு பிரச்சனையில் மன அழுத்தத்தில் இருந்தால் அவளை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்கிறாள். அவளுக்கு பிரச்சனையை புரிய வைத்து அவளை நல்ல வழியிலும் எடுத்து செல்கிறார் என்று கூறியிருக்கிறார்.






