ரேவந்த் ரெட்டி சொன்னது சரி, காவல்துறை மீது குறை இல்லை, ஆனா அல்லு அர்ஜுன் – பவன் கல்யாண் பேட்டி

0
76
- Advertisement -

அல்லு அர்ஜுன் வழக்கு தொடர்பாக பவன் கல்யாண் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் அல்லு அர்ஜுன் பற்றிய செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்குக்கு வந்த அல்லு அர்ஜுனை பார்க்க சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கூடி இருந்தார்கள். இந்த கூட்ட நெரிசலில் ஏராளமானோர் மூச்சு திணறி மயங்கி விழுந்திருந்தார்கள். அந்த நெரிசலில் சிக்கி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகனும் கோமாவில் இருக்கிறார்.

-விளம்பரம்-

இதை அடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழு மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தார்கள். பின் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் வைத்து போலீஸ் கைது செய்து இருந்தது. பின் அவர் இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும், அல்லு அர்ஜுனின் இந்தக் கைது நியாயமற்றது என்று கண்டித்து திரைப்பிரபலங்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

அல்லு அர்ஜுன் சர்ச்சை:

மேலும், இது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் செய்தது மனிதத் தன்மையற்ற, பொறுப்பற்ற செயல். சந்தியா திரையரங்கிற்கு வந்த அல்லு அர்ஜுன் கார் கதவு திறந்து ரோட் ஷோ காட்டி இருந்தார். இந்த கூட்டத்தில் தான் ஒரு பெண் அநியாயமாக உயிரிழந்தார். இது வருத்தத்துக்குரிய ஒன்று. இதுதான் உங்களுடைய மனிதமா? என்று விமர்சித்து பேசி இருந்தார். பின் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுன், ஹைதராபாத் திரையரங்கில் நடந்தது எதிர்பாராத சம்பவம். இதில் யாருடைய தவறுமே இல்லை. மனித நேயம் அற்றவன், கெட்டவன், மோசமானவன் என்று என்னை சித்தரிக்க முயல்வதை நிறுத்துங்கள்.

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்:

இது ரொம்பவே எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறி இருந்தார். இதை அடுத்து கடந்த 22 ஆம் தேதி உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல் எரிந்தும், பூந்தொட்டிகளை உடைத்தும் கலவரம் செய்து இருந்தார்கள். இதனால் கலவரத்தில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்திருந்தார்கள். பின் இந்த வழக்கு தொடர்பாக தனியறையில் போலீஸ் அல்லு அர்ஜுன் இடம் மீண்டும் விசாரணை நடத்தி இருந்தது. சுமார் மூன்று மணி 40 நிமிடங்கள் வரை விசாரணை நடைபெற்று இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பவன் கல்யாண், சினிமா என்பது ஒரு குழு முயற்சி. எல்லோரும் அதன் ஒரு பகுதியாக தான் இருக்கிறார்கள். ஆனால், இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் மட்டுமே தனியாக குற்றவாளியாக்கப்பட்டு இருக்கிறார். இது சரி கிடையாது என்று நான் சொல்வேன்.

-விளம்பரம்-

பவன் கல்யாண் பேட்டி:

அல்லு அர்ஜுன் படம் பார்க்க சென்றபோது படத்தை திரையிட்ட தியேட்டர் நிர்வாகம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இந்த விவகாரம் பற்றி ஊழியர்கள் அல்லு அர்ஜுனுக்கு முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும். அவர் வந்தவுடன் விஷயத்தை தெரிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இது அல்லு அர்ஜுனுக்கு தெரிந்திருந்தாலும் கூட்டத்தின் ஆரவாரங்களுக்கு மத்தியில் அவர் அதை கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. இது போன்ற சம்பவங்களில் நான் காவல்துறையை குறை சொல்லவில்லை. காரணம், சமீபத்தில் நான் விஜயநகர மாவட்டத்தில் சுற்றுப்பயணம் போயிருந்தேன்.

அல்லு அர்ஜுன் பற்றி சொன்னது:

அப்போது காவல்துறையினர் என்னை முன்னிலையில் இருக்க சொன்னார்கள். அல்லு அர்ஜுன் போதுமான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சிரஞ்சீவி கூட தியேட்டருக்கு செல்வார். ஆனால், தனியாகவும் மாறுவேடத்திலும் தான் போவார். நானும் அப்படித்தான் சென்றிருந்தேன். திரைப்பட நட்சத்திரங்கள் பாராட்டுக்கும் விருதுகளுக்கும் தகுதியானவர்கள். ஆனால், அதை புறக்கணிக்க முடியாது. தன்னை தேடி வந்திருக்கும் ரசிகர்களுக்கு அந்த நடிகர் உரிய மரியாதை கொடுக்காமல் இருக்கும்போது அவற்றைப் பற்றி ரசிகர்கள் வேறு மாதிரி நினைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து நிறைய கடுமையான நிலைப்பாட்டை எடுத்த தெலுங்கானா முதல்வரை பாராட்டுகிறேன். அதேபோல் அல்லு அர்ஜுன், ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய பெயரை உச்சரிக்க மறந்துவிட்டார் என்பதற்காக ரேவந்த் ரெட்டி அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டார் என்று சொல்வதெல்லாம் தவறு. அல்லு அர்ஜுனுக்கு பதிலாக அந்த இடத்தில் ரேவந்த் ரெட்டி இருந்திருந்தால் கூட அல்லு அர்ஜுன் போல அவரும் கைது செய்யப்பட்டு இருந்திருப்பார் என்று பேசி இருந்தார்.

Advertisement