அந்த விஜய் படத்தை ரீ – மேக் செய்தால் உயிரை மாய்த்துக்கொள்வேன் – பவன் கல்யாண் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை கடிதம் விட்ட தெலுங்கு ரசிகர்.

0
584
vijay
- Advertisement -

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான “தெறி” திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இப்படமானது தெலுங்கில் ரிமேக் செய்வதில் சில சிக்கல்கள் வந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான பாவன் கல்யாண் ரசிகை ஒருவர் செய்திருக்கும் செயலானது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும், இணையத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களின் மத்தியில் தளபதி என்ற அந்தஸ்துடன் இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பெரும் வெற்றியை படக்குழுவிற்கு தந்ததுண்டு. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் தெறி. இப்படைத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் எமி ஜாக்சன், மீனா மகள் பேபி நைனிகா, பிரபு, ராதிகா போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் எதிர்பார்த்த படியே இப்படமானது தெறி படக்குழுவினருக்கு வெற்றித்திரைப்படமாக அமைத்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த படத்தை தெலுங்கில் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் ரீமேக் செய்வதாக இணையத்தில் வந்த செய்தியை தொடந்து “எங்களுக்கு ரரீமேக் வேண்டாம்” என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி உள்ளது. மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் மேலும் இந்த தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை தடுக்க தெலுங்கு ரசிகர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளை கொடுத்து வருகின்றனர்.

இப்படியிருக்கும் போது கடந்த வியாழக்கிழமை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஹரிஷ் சங்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெரிய அறிவிப்பு வரவிருக்கிறது ஏற்று பவன் கல்யானையும் டேக் செய்து கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் “எங்களுக்கு தெறி ரீமேக் வேண்டாம்” என டிரெண்டாக்க ஆரம்பித்து ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் தான் பவன் கல்யாணின் ரசிகைகளில் ஒருவரான திவ்ய ஸ்ரீ என்பவர் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

-விளம்பரம்-

அந்த கடிதத்தில் திவ்ய ஸ்ரீ கூறியிருப்பது `நான் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதியதில்லை அப்படியிருக்கும் போது நான் தற்கொலை கடிதம் எழுதுவேன் என்று கனவிலும் கூட நினைத்து பார்க்கவில்லை. ஆனால் தெறி ரீமேக் செய்யவிற்பதாக வந்த தகவலை தொடர்ந்துதான் நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன் என்று கூறினார். மேலும் இப்படத்தை நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பார்த்து வருகிறோம்.

என்னுடைய சாவிற்கு பிறகாவது தெறி படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை கைவிடுவீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய சாவுக்கு மைத்ரி மூவிஸ் மற்றும் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் தான் காரணம் என்றும் என்னுடைய உணர்ச்சிகளுடன் விளையாடாதீர்கள் பவன் கல்யாண் என்றும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்த கடிதமானது இணையத்தில் வைரலாகவே அதனை பலரும் ரீ ட்விட் செய்து ட்ரண்ட் ஆக்கி தங்களுடைய எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மேலும் பவன் கல்யாண் ரீ மேக் திரைப்படங்கள் எடுப்பது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட பீம்லா, பிங்க் போன்ற திரைப்படங்களில் பவன் கல்யாண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement