‘மன்னிக்கவும் ஆளுநர் ஆர்.என்.ரவி சார்’ சட்டசபையில் இருந்து வெளியேறிய ஆளுநர் குறித்து PC ஸ்ரீராம்.

0
123
- Advertisement -

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் நடுவே ஆளுநர் வெளியேறிய சம்பவம் வெறும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இது குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழில் ஆளுநர் உரையாற்றத் தொடங்கினார்.

-விளம்பரம்-

ஆனால், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள், தமிழ்நாடு எங்கள் நாடு” என்ற முழக்கத்தை முன்வைத்து, ஆளுநரை பேரவையிலிருந்து வெளியேறக்கோரி அமளியில் ஈடுபட்டனர். ஆனால், ஆளுநர் அதைப் பொருட்படுத்தாமல், தனது உரையை தமிழில் தொடங்கினார். அப்போது உரையில் இடம்பெற்ற “திராவிட மாடல்” என்னும் வார்த்தையை ஆளுநர் வாசிக்கவில்லை என்று தி மு க சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

- Advertisement -

சட்டசபையில் ஆளுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, அவரது தன்னிச்சையான உரை சபை குறிப்பில் இடம்பெறாது என கண்டனத் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனை சற்றும் எதிர்பாராத ஆளுநர் ரவி, தமிழ்நாட்டு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் வெறும் விவாகதமாக மாறிய நிலையில் தற்போது இந்த ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப் பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் வெளியேறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று சட்ட சபை கூட்டம் 10 மணிக்கு துவங்கிய நிலையில் ஆளுநர் ரவி சட்ட சபைக்கு உள்ளே நுழைந்தார். அவர் வந்த பிறகு தமிழ் தாய் வாழ்த்து உடன் எந்த கூட்டம் தொடங்கியது. அதன் பின்னர் சில கருத்துக்களை மட்டும் தெரிவித்து விட்டு ஆளுநர் தன்னுடைய உரையை முடித்து விட்டார். ஆளுநரின் தமிழாக்க உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார் ஆனால் சில கருத்துக்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது இதன் பின்னரே ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.

-விளம்பரம்-

இந்த விவகாரம் சட்சியாக வெடித்த நிலையில் ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில்  சபாநாயகர் தமிழ் வடிவத்தை படிக்கும்போது ஆளுநர் முழுவதுமாக அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை வாசித்து முடித்தவுடன், தேசிய கீதம் வாசிக்கப்படும் என கருதி ஆளுநர் எழுந்தார். ஆனால், ஏற்கனவே இருந்த நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதற்குப் பதிலாக ஆளுநரை நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர் என்றெல்லாம் சபாநாயகர் கடுமையாக விமர்சித்தார்.

இதனால், தனது பதவியின் கண்ணியத்தைக் கருதி ஆளுநர் அவையைவிட்டு வெளியேறினார்’ என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசும் பொருளாகி இருக்கும் நிலையில் விவகாரம் குறித்து பதிவிட்டுள்ள PC ஸ்ரீராம் ‘ மன்னிக்கவும் ஆளுநர் ஆர்.என்.ரவி சார், நீங்கள் நடந்து கொண்டவிதம் ஏற்புடையதல்ல; பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள்? என கேட்டுள்ளார். பிசி ஸ்ரீராமின் இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement