இந்த ட்ரெஸ்ஸ போடாதன்னு சொன்னாங்க – PS இசை வெளியீட்டு விழாவில் அணிந்த உடை குறித்து DD

0
572
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார் டிடி. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

சமீப காலமாகவே டிடி பல விதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதே போல டிராவல் பிரியரான இவர் அடிக்கடி சுற்றுல்லா செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட மாலத்தீவிற்கு சென்று பல விதமான புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அந்தமானுக்கு சுற்றுல்லா சென்று இருந்தார். அங்கே கடற்கரையில் அமர்ந்த வாறு பீச் உடையில் போஸ் கொடுத்திருந்தார்.

- Advertisement -

முதன் முறையாக டிடியை இப்படி ஒரு கிளாமர் கோலத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் ஷாக்கடைந்து உள்ளனர். ஆனால், இந்த புகைப்படத்தை பதிவிட்டு கருத்து சொல்லியுள்ள டிடி, ஆடையில் ஒன்றும் கிடையாது நம் மனநிலையில் தான் உள்ளது. அந்தமானில் இருக்கும் ஒரு ஆண்கள் கூட இந்த உடையை அணிந்து கொண்ட எனக்கு பாதுகாப்பு இல்லாமலோ இல்லை அசௌகரியமான உணர்வையோ கொடுக்கவில்லை.

உலக சுற்றுலா தினமான இன்று நான் விரும்புவது, பெண்களும் இரட்டை பாலினத்தவர், தங்கள் கனவுகளை நோக்கி பயணம் செய்யும்போது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஊரடங்கு காரணத்தினால் சுற்றுலா துறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை நம்பி பல உயிர்கள் இருக்கிறது. அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஆடை சுதந்திரம் குறித்து அடிக்கடி பதிவிட்டு வரும் டிடி சமீபத்தில் பொன்னியின் செல்வன் இசை வெளியிட்டு விழாவில் கட்டி சென்ற புடவை குறித்தும் பதிவிட்டு இருக்கிறார். டிடிக்கு காலில் பிரச்சனை இருப்பதால் முன்பை போல அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. இருப்பினும் சில முக்கிய விழாக்களை தொகுத்து வழங்கி வரும் டிடி சமீபத்தில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார்.

அந்த விழாவிற்கு கட்டி சென்ற புடவை குறித்து பதிவிட்ட டிடி ‘பெரிய பார்டர் புடவை அணியாதீர்கள், நீங்கள் குட்டையாக இருப்பீர்கள், இதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன், எப்பொழுதும் சரி என்று எனக்குள் சொல்லிக் கொள்கிறேன் டிடி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் மூளைக்குள் இருப்பது, உங்கள் பழக்கவழக்கங்கள், உங்கள் வார்த்தைகள் தான் உங்களை உருவாக்கும். உயரமாக இருங்கள், உங்கள் உடல் உயரம் அல்ல, அனைத்து அன்புக்கும் நன்றி’

Advertisement