தடையை கண்டு கொள்ளாமல் ரோட்டில் கேரம் விளையாட்டு. மாஸ்டர் பட பிரபலம் எடுத்த அதிரடி நடவடிக்கை.

0
15645
carrom

ஒட்டுமொத்த உலகத்தையும் இந்த கொரோனா வைரஸ் கதி கலந்த வைத்து இருக்கிறது. போரை விட பயங்கரமான அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இந்திய பிரதமர் அவர்கள் 21 நாட்களுக்கு யாரும் வெளியில் வரக்கூடாது என்று ஊரடங்கு உத்தரவு இட்டு உள்ளார். இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : என் மகள் பிறந்த நொடியே போருக்குத் தயாராகியிருக்கா. சஞ்சீவ் நெகிழ்ச்சி.

இது குறித்து சிவகார்த்திகேயன், வரலட்சுமி சரத்குமார், ரித்விகா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் ரத்னகுமார் அவர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவை வைரலாகி வருகிறது. மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ரத்னகுமார். தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் எழுத்து மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இளைஞர்கள் கேரம் விளையாடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டும் இயக்குனர் ரத்னகுமார் தெருவில் இளைனர்கள் சிலர் சேர்ந்து கேரம்போர்டு விளையாடியுள்ளார்கள்.

இதை பார்த்த அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து இயக்குனர் ரத்னகுமார் ட்விட்டரில் கூறியிருப்பது, தனிமனித ஒழுக்கம் தான் அத்தியாவசிய தேவை. இந்த உலகையே ஒரு நுண்ணுயிர் அழித்து வருகின்றது. இந்நிலையில் அனைவரும் ஒன்றுபட்டு தான் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இவரின் இந்த செயலைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். அரசாங்கம் சொல்வதைக் கேட்டு அனைவரும் ஒன்றாக இருந்து இந்த கொரோனாவை எதிர்த்து போராடுவோம். ஜெய்ஹிந்த். பிரதமர் மோடி அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.

Advertisement