விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.
இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள். ஆனால், இவர்கள் திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது. அதற்கு காரணம் ஆலியா மானசா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் என்று கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : கொரோனா வைரஸால் உயிரிழந்தால் இப்படி தான் அடக்கம் செய்ய வேண்டுமாம்.
இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் நண்பர்களும், உறவினர்களும், திரைஉலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடினார்கள். திருமணத்திற்கு பின்னர் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் ஆல்யா மானஸாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து ஆல்யாவின் கணவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில், நாங்க எதிர்பார்த்தது போலவே பெண் குழந்தை பிறந்ததுல எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். ஆனால், இந்த மகிழ்ச்சியை நாலு பேருக்குச் சொல்லிக் கொண்டாடடுற மனநிலை இப்ப இல்லை. காரணம், உலகமே கொரோனாவை எதிர்த்துப் போராடிட்டிருக்க இந்தச் சூழல்தான் உலகத்தையே மிரட்டும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளைப்பார்க்கும் போது இதை போர் என்று சொல்வது தவறே இல்லை.
எங்களுடைய மகள் பிறந்த அடுத்த நொடியிலேயே அந்தப் போருக்குத் தயாராகியிருக்கா. கடினமான சூழ்நிலைகளை ஒருதடவை எதிர்கொண்டுவிட்டால் ஒரு துணிச்சல் வரும் பாருங்க, அது எங்க பாப்பு குட்டிக்கும் கிடைக்கும் என்பது தான் சந்தோஷத்துக்குக் காரணம் என்று தனது மகள் குறித்து நெகிழ்சியாக கூறியுள்ளார்.