‘எங்க போனாங்க இத்தனை வருஷம்’ பல ஆண்டுகள் கழித்து மேடையில் தோன்றிய பெப்சி உமா

0
1155
- Advertisement -

மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா களமிறங்க இருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெப்சி உமா என்று சொன்னால் இன்றைக்குக் கூட இளைஞர்கள் துள்ளி குதித்து கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு அவருடைய அழகும், குரலும் ரசிகர்களை கட்டி இழுத்தது. மேலும், 90 கால கட்டங்களில் போன் பிரபலம் இல்லாத காலத்தில் கூட அதிக ரசிகர்களை கொண்டவர். அதோடு அவருடைய சிரிப்பு ,அழகு, குரல் என அவரை புகழாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவர் சினிமா நடிகைகளை விட கொள்ளை அழகும், ரசிகர்களையும் கொண்டவர். அதோடு இவர் என்றும் மாடர்ன் உடைகளை போடாதவர். இவர் அழகாக வண்ண வண்ண புடவைகளை உடுத்தி கொண்டால் போதும் பார்ப்பதற்கு கண்களை கவர வைக்கும். அது தான் அவருடைய கூடுதல் சிறப்பும். இன்று வரை அவர் இடத்தை யாராலும் பூர்த்தி செய்யவில்லை. மேலும், எந்த விஜே கூட அவருடைய இடத்தை பிடிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

பெப்சி உமா குறித்த தகவல்:

மேலும், உமா அவர்கள் பிளஸ் டூ படிக்கும் போதே தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார். அதற்கு பின்னர் இவர் முதன் முதலாக பொதிகை சேனலில் தான் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின்னர் அவருடைய பேச்சுக்கும்,அழகுக்கும் சன் டிவியில் “உங்கள் பெப்சி சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. இதை ஆரம்பித்த நாளில் இருந்தே இவருக்கு பல ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பின் ரசிகர்கள் உமாவிடம் பேசுவதற்காகவே பல நாட்கள் காத்து இருந்தார்கள்.

ரசிகர்கள் பலரும் பெப்சி உமாவுக்கு சினிமா பிரபலங்களுக்கு இணையாக கட் அவுட் எல்லாம் வைத்து இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் கேரளாவில் ஒரு ரசிகர் கூட்டம் ஒன்று பெப்சி உமாவிற்கு கோயிலைக் கட்டி இருக்கிறார்கள். மேலும், ஒரு நிகழ்ச்சியை அதிக வருடங்கள் தொகுத்து வழங்கிய ஒரு தொகுப்பாளரும் ‘பெப்சி உமா’ தான். இந்த உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை 15 வருடம் உமா தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்பு:

அதோடு ரஜினி, கமல், மணிரத்னம், பாரதிராஜா என தமிழ் சினிமா ஜாம்பவான்களுக்கு எல்லோரும் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பளித்தார்கள். ஆனால்,உமா அவர்கள் எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டார். இந்த அளவிற்கு பிரபலமான உமா அவர்கள் தற்போது சினிமா மற்றும் டிவியில் இருந்து விலகி ஒரு நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். கிட்டத்தட்ட 25 வருடங்களாக பெப்சி உமா சின்னத்திரையில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

மீண்டும் நிகழ்ச்சியில் பெப்சி உமா:

இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பெப்சி உமா கலந்து கொண்டிருந்தார். அவருக்கு சன் டிவியின் கோல்டன் ஐகான் ஆப் டெலிவிஷன் அவார்ட் வழங்கப்பட்டிருந்தது. விருது வாங்கிய பிறகு பெப்சி உமாவிடம் ஏன் சின்னத்திரைக்கு வரவில்லை? என்று கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், நான் இங்கு தான் இருந்தேன். விரைவில் சின்னத்திரையில் சந்திப்போம் என்று கூறியிருந்தார். இப்படி பெப்சி உமா அளித்திருக்கும் பதில் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. ரசிகர்கள் பலரும் பெப்சி உமாவின் வருகைக்கு ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement