இயக்குனர் சிவப்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். இந்த படத்தில் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் இந்த படத்தில் ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், தீபா, கீதா கைலாசம், சாய் வினோத், சுபத்ரா ராபர்ட், லோகு, பாவா சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை இ5 என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த படம் ஜாதி பாகுபாடு பற்றி பேசி இருக்கிறது. இந்த படத்தைப் பார்த்து விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என எல்லோருமே பாராட்டி பதிவுகளை போட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநர் தங்கர் பச்சானின் அருமைப் புதல்வன் தம்பி விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் பேரன்பும் பெருங்கோபமும்.
தலைவர் திருமாவளவன்:
இயக்குநர் சிவப்பிரகாசத்தின் முதல் படைப்பு. சாதி பிறப்பில் இல்லை; வளர்ப்பில் தான் உள்ளது என்பதை அழுத்தமாகப் பேசும் அரிய படைப்பு. ஆணவக் கொலைகளைச் செய்யும் அறியாமைக்கு அறிவியல் அடிப்படையில் புத்தி புகட்டும் புரட்சிகரப் படைப்பு. சாதி ஒழிப்பின் தேவையை உணர்த்துகிற மாபெரும் உரையாடலை நிகழ்த்தும் உன்னதப் படைப்பு. அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டிய இடதுசாரிக் கருத்தியல் படைப்பு. இயக்குநர் சிவப்பிரகாசத்தையும், நாயகன் விஜித் பச்சானையும் ஊக்கப்படுத்த வேண்டியது ஒவ்வொரு முற்போக்கு சக்தியின் பொறுப்பாகும்.

பாமக தலைவர் அன்புமணி:
உடனே அவர்களை வரவேற்கத் திரையரங்குகளில் திரளுவோம் என்று கூறி இருக்கிறார். பாமக தலைவர் அன்புமணி, இயக்குனர் தங்கர் பச்சானின் புதல்வர் விஜித் பச்சன் கதையின் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. சிறப்பாக நடித்திருக்கும் அன்புத் தம்பி விஜித் பச்சனின் திரையுலக வெற்றிப் பயணத்திற்கு நல்ல தொடக்கமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார்.
இயக்குநர் #தங்கர்_பச்சான் அவர்களின் அருமை புதல்வன் தம்பி #விஜித்_பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் #பேரன்பும்_பெருங்கோபமும் இயக்குநர் #சிவப்பிரகாசம் அவர்களின் முதல் படைப்பு.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 6, 2025
"சாதி பிறப்பில் இல்லை ; வளர்ப்பில் தான் உள்ளது" என்பதை அழுத்தமாகப் பேசும் அரிய படைப்பு.…
சீமான் பதிவு:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரிய படம், சின்ன படம் என இல்லாமல், நல்ல படம், கெட்ட படம், ஓடும் படம், ஓடாத படம் எனும் வரிசையில் இது ஒரு சிறந்த படம். இதுபோன்ற படைப்புகள் வெளியானால் தான் எதிர்காலத்தில் சிறந்த படைப்புகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று கூறி இருக்கிறார். படத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆண் தலைமை செவிலியராக ஹீரோ விஜித் பச்சன் வேலை செய்து வருகிறார். அப்போது குழந்தை கடத்தல் வழக்கில் ஹீரோவை கைது செய்கிறார்கள். விசாரணையில் ஹீரோ விஜித் குற்றத்தை ஒத்துக் கொள்கிறார். அதோடு போலீசிடமும் பல அதிர்ச்சிகரமான தகவலையும் விஜித் பச்சன் சொல்கிறார்.
இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் புதல்வர் விஜித் பச்சான் கதையின் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது . சிறப்பாக நடித்திருக்கும் அன்புத் தம்பி விஜித் பச்சானின் திரையுலக வெற்றிப் பயணத்திற்கு நல்ல… pic.twitter.com/GtCSgkMSqF
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 6, 2025
கதைக்களம்:
இதை அடுத்து அவரை நீதிபதி முன்பு நிற்க வைக்கிறார்கள். அதற்குப் பின் அவருக்கு தண்டனையும் கிடைத்து சிறையில் அடைக்கிறார்கள். அப்போதுதான் அவரைப் பற்றி போலீசார் விசாரிக்கிறார். இவர் வேண்டுமென்றே சிறைக்கு வந்த விஷயம் தெரிய வருகிறது. செய்யாத குற்றத்துக்காக விஜித் பழியேற்று கொண்டு சிறைக்கு வருகிறார். எதற்காக விஜித் சிறைக்கு வந்தார்? போலீஸிடம் விஜித் பச்சன் சொன்ன ரகசியம் என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.






