மாணவர்களுக்கு காசு, வைர நெக்லஸ் கொடுத்தது எல்லாம் பெரிய விஷயம் இல்ல – பேரரசு பேச்சு

0
2366
Perarasu
- Advertisement -

2023-ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த விஷயம் தான் கடந்த சில தினங்களாக பேசுபொருளாகி வருகிற நிலையில் தற்போது விஜய்யின் இந்த செயல் குறித்து இயக்குனர் பேரரசு கூறி இருக்கும் கருத்து வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதோடு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. பின் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார். விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது.

மேடையில் விஜய் பேசியது:

மாணவர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்களின் கோரிக்கையும் மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், கல்வி குறித்தும், அரசியல் குறித்தும், தலைவர்கள் குறித்தும் பேசி இருக்கிறார். மேலும், நடிகர் விஜயின் இந்த செயலை குறித்து பலரும் பாராட்டி இருந்தார்கள். சிலர் விமர்சித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

பேரரசு கருத்து :

இந்த நிலையில் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்த பேரரசு, விஜய் மாணவர்களுக்கு வழங்கிய ஊக்க தொகை குறித்து பேசி இருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘விஜய் மாணவர்களுக்குப் பரிசுகள், ஊக்கத்தொகை கொடுத்ததெல்லாம் பெரிய விஷயமில்லை. மக்களும், மாணவர்களும் படிக்க வேண்டும், ஓட்டுக்குக் காசு வாங்கக்கூடாது என்று நல்ல அறிவுரைகளை அவர் சொல்லியிருப்பதைத்தான் பெரிய விஷயம்.

நடிகர்கள் சொல்வதைத்தான் கேட்கிறார்கள் :

இது அடுத்த தலைமுறைக்குத் தேவையான விஷயமாக நான் கருதுகிறேன். மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் நூறு ஆசிரியர்கள் பேச்சைக் கேட்பதை விட நடிகர்கள் சொல்வதைத்தான் கேட்கிறார்கள்.அந்த வகையில் குடும்பங்களுக்கும், குழந்தைகளுக்கும் விருப்பமான நடிகராக இருக்கும் விஜய் இப்படி நல்ல அறிவுரைகளை இளம் தலைமுறைக்குச் சொல்வது வரவேற்கத்தக்கது. எம்.ஜி.ஆரும் இதைத்தான் செய்து சாதித்தார். விஜய்யும் அதே பாணியைத்தான் பின்பற்றுகிறார்’ என்று கூறியுள்ளார்.

Advertisement