அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினி ஆடியதற்கு எழுந்த சர்ச்சைக்கு இயக்குனர் பேரரசு கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சோசியல் மீடியா முழுவதும் ஆனந்த் அம்பானி திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு இருந்தது. உலக அளவில் மிக பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணம் கொண்டாட்டங்கள் நடைபெற்று இருந்தது.
தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள், ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை தான் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து இருக்கிறார். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்த பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. திருமணத்திற்கு முந்தையாக நடைபெற இருக்கும் விழாக்கள் எல்லாம் கோலாகலமாக நடந்தது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள்.
அம்பானி வீட்டு திருமணம்:
அதேபோல் இந்த திருமணத்தில் இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர்கள், திரையுல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சர்வதேச பிரபலங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து இருந்தார்கள். அந்த வகையில் பிரம்மாண்டமாக நடந்த அம்பானி வீட்டு திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது மனைவி லதா ரஜினிகாந்த், இளைய மகள் சௌந்தர்யா, மருமகன், பேரனுடன் கலந்து கொண்டு இருந்தார்.
ரஜினி நடனமாடிய வீடியோ:
அதோடு இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் சேர்ந்து உற்சாகத்தில் நடனமாடி இருந்தார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது. இது தொடர்பாக, அம்பானி வீட்டு திருமண முடிந்து தமிழகம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு ரஜினி, இது அம்பானி வீட்டினுடைய கடைசி மகன் திருமணம். அதனால் சந்தோஷத்தில் நடனம் ஆடி இருந்தேன் என்று கூறியிருந்தார்.
பேரரசு வீடியோ:
இப்படி ரஜினி விளக்கம் கொடுத்தும் ரஜினியா நடனமாடுவது? சூப்பர் ஸ்டார் இப்படி எல்லாம் பண்ணலாமா? என்றெல்லாம் சிலர் விமர்சித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பேரரசு, ரஜினி சார் ஒரு சாதாரண மனிதன் தான். அவருக்கு உள்ளேயும் ஆதங்கம் இருக்கும். அம்பானி வீட்டு திருமணத்தில் அவர் சந்தோஷத்தில் நடனம் ஆடி இருந்தார். இது ஒரு தேச குற்றமா? சூப்பர் ஸ்டார் எப்படி ஆடலாம்? இல்லன்னா நீங்க போய் ஆடுங்க. சூப்பர் ஸ்டார் உங்க அடிமையா? அவரும் ஒரு சாதாரண மனிதர்.
ரஜினி நடனம் குறித்து சொன்னது:
அவரையும் இயல்பான வாழ்க்கை வாழ விடுங்க. இதை பெரிதாக விமர்சித்துக் கொண்டிருக்காதீர்கள். தினமும் அவருடைய நடனத்தை குறித்து சோசியல் மீடியாவில் சர்ச்சைகள் வரும்போது அவருக்கும் கூனி குறுகும் நிலை வரும். எதற்கு தேவையில்லாமல் ஒரு சின்ன விஷயத்தை பெரிதாக பேசுகிறீர்கள். நாட்டில் 1008 பிரச்சனைகள் இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் பேசாமல் ரஜினி சார் எப்படி ஆடலாம்? இது எல்லாம் பேசுவதா என்று ஆவேசத்துடன் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.