வெறும் 20 அணுகுண்டில் பாகிஸ்தான் என்ற நாடே இல்லாமல் போகிவிடும். கவலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர்!

0
1158
Musarab
- Advertisement -

புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை சரியாக 3.30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. பால்கோட் பகுதியில் நடந்த இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதல் மிராஜ் 2000 எனும் 12 போர் ரக விமானங்கள் மூலம் நடத்தப்பட்டது.

-விளம்பரம்-
Musarab

இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு முக்கிய காரணமே பாகிஸ்தான் தீவிரவாதிகள் புல்மாவில் நடைபெற்ற தாக்குதல் தான். புல்வாமா தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் மாநாட்டில் நேற்று பேசிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் அனு ஆயுத போருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் , இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நட்பு மிகவும் மோசமாக உள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் அனு ஆயுத தாக்குதலை நடத்த ஒருபோதும் எண்ணக்கூடாது. இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டாலும், பதிலுக்கு அவர்கள் இருபது அணுகுண்டுகளை பாகிஸ்தான்மீது போட்டு பாகிஸ்தானையே இல்லாமல் செய்துவிடுவார்கள். இந்தியாவிடம் மோத வேண்டும் என்றால் எடுத்ததுமே மொத்தமாக 50 அணுகுண்டுகளை வீச வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேசிய பாதுகாப்பு குழு உடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரியான நேரத்தில் தகுந்த இடத்தில் இந்தியாவிற்கு, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இது குறித்து உலக நாடுகளிடம் இந்தியா பற்றி புகார் கூறும் என்றும், இம்ரான் கான் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement