அட, இந்த பேட்ட பட நடிகருக்கு இப்போ தான் திருமணம் முடிஞ்சிருக்கு. யாருனு பாருங்க.

0
1164
petta
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்த படம் தான் பேட்ட. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர் தான் நடிகர் மணிகண்டன் ஆச்சாரி. கேரள மாநிலத்தில் உள்ள திருப்புனித்துராவை சேர்ந்தவர் மணிகண்டன் ஆச்சாரி. இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கம்மாட்டி என்கிற மலையாள படம் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இதனை தொடர்ந்து சிப்பி, மம்மூட்டியின் மாமாங்கம் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். தமிழில் மணிகண்டன் ஆச்சாரி அவர்கள் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று மணிகண்டன் ஆச்சாரி அவர்களுக்கு எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

இதையும் பாருங்க : இந்த நடிகை இந்த பிரபல தமிழ் நடிகரின் மனைவியா ? ஆனால், விவாகரத்து ஆகிடிச்சி.

- Advertisement -

மணிகண்டன் ஆச்சாரி அவர்கள் கேரள மாநிலம் மரடு பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவரை காதலித்து வந்தார். மணிகண்டன் ப்ரொபோஸ் செய்ய அஞ்சலியும் காதலை ஏற்றுக் கொண்டார். பின் இருவீட்டாரும் இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள். மேலும், இவர்கள் உடைய திருமணத்தை இன்று நடத்துவதாக 6 மாதங்களுக்கு முன்பே நிச்சயம் செய்தார்கள். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது.

இதனால் மணிகண்டன் ஆச்சாரி அவர்கள் தங்கள் திருமண திட்டத்தை கைவிட விரும்பவில்லை. மணிகண்டன் ஆச்சாரி குறித்த தேதியில் எரூரில் உள்ள அய்யம்பில்லிக்காவு பகவதி கோவிலில் வைத்து அஞ்சலிக்கு இன்று தாலி கட்டினார். இரு வீட்டார் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை நடிகர் மணிகணடன் அவர்கள் கொரோனா நிதிக்கு கொடுத்து விட்டார். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் மணிகண்டனுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : இரவு பார்ட்டி, ஆண் நண்பருடன் சால்சா ஆட்டம். சுச்சி லீக்ஸ் நடிகை அனுயாவின் வைரல் வீடியோ.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனையால் பல பிரபலங்கள் தங்களின் திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளனர். இந்த கொரோனா காரணமாக பலர் தங்கள் திருமணத்தை எளிமையாக நடத்தியும் உள்ளனர். மலையாள நடிகை உத்ரா உண்ணி அவர்கள் தன் திருமணத்தை எளிமையாக நடத்த இருப்பதாக அறிவித்தார். தெலுங்கு நடிகர் நிதின் தன் திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் பிரமாண்டமாக நடந்தது. அந்த திருமணத்தில் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement